பென்சில்வேனியா மாநிலத்தின் மான்ஹெய்ம் டவுன்ஷிப்பில், விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓய்வூதியர் இல்லத்திற்கு அருகில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ விரைந்துள்ளனர்.
பல ஆம்புலன்ஸ்கள் உட்பட அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. ஆன்லைனில் பகிரப்பட்ட புகைப்படங்களில், தீயணைப்பு வீரர்கள் “பேரழிவு நிகழ்வு (MCI)” என்று அறிவித்த நிலையில், கருப்பு புகை மூட்டங்கள் வானத்தை நோக்கி எழும்புவதைக் காட்டுகின்றன.
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன், ஆறு இருக்கைகள் கொண்ட பீச்ச்கிராஃப்ட் விமானத்தில் ஐந்து பேர் இருந்ததாகவும், அது பிரெத்ரன் வில்லேஜ் ஓய்வூதியர் சமூகத்தில் விழுந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. அது ஓஹியோவின் ஸ்பிரிங்ஃபீல்டுக்கு செல்லும் வழியில் திடீரென கீழே விழுந்தது.