இந்தியன் தாத்தாவை அடித்தே கொன்ற 13 வயது வெள்ளை இனப் பெண் !

தனது வளர்ப்பு நாயை கூட்டிக் கொண்டு சிவனே என்று தெருவில் நடந்து சென்ற வயதான (இந்திய வம்சாவழி) தாத்தா ஒருவரை, தனது செருப்பை களற்றி அவர் கன்னத்தில் அறைந்த 14 வயது மாணவர், அவர் தடுமாறி கீழே விழுந்த சமயம் காலால் எட்டி முகத்தில் உதைக்க…. இந்த 13 வயது மாணவியும் சேர்ந்து அவரை தாக்கியது மட்டுமல்லாது அதனை வீடியோ…. வேறு எடுத்து நண்பர்களோடு பகிர்ந்துள்ளார்கள் !

80 வயதாகும் கோகில் என்ற தாத்தா லண்டனில் ஒரு பெரும் கம்பெனியை கட்டி எழுப்பி, பலருக்கு வேலை வாய்ப்பை கொடுத்தவர். பின்னர் இளைப்பாறி வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் தனது வளர்ப்பு நாயைக் கூட்டிக் கொண்டு வெளியே சென்றவேளை. அங்கே வந்த 13 வயது மாணவி மற்றும் அவரது 14 வயது ஆண் நண்பர் ஆகியோர், தாத்தாவை பார்த்து இனத் துவேச வார்த்தையால் திட்டியுள்ளார்கள்.

பின்னர் செருப்பை களற்றி மாணவன் அடித்து, தாத்தாவை நிலத்தை தள்ளி காலால் மிதித்துள்ளார். இதனால் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் இறந்து விட்டார். இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு(2024 செப்டெம்பர் மாதம்) பிராங்கிளின் பார்க், Leicester  இடம்பெற்றுள்ளது

13 வயது மாணவி மற்றும் 14 வயது மாணவன் இருவரையும் பொலிசார் உடனே கைதுசெய்தார்கள். வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம்(செவ்வாய் 08) நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். இருவரும் தலா குறைந்தது பட்சம் 6 வருடங்களாவது சிறையில் இருக்கவேண்டும் என்று ஜூரிகள் தமது முடிவை அறிவித்தார்கள். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி உடனே எதுவுமே நடக்காதது போல கண்ணீர் விட்டு கதறி அழுதார். நாம் எல்லாம் 21ம் நூற்றாண்டில் தான் வாழ்கிறோமா ? என்பது தெரியவில்லை. லண்டன் போன்ற இடங்களில் கூட இப்படிப்பட்ட, படிப்பறிவு இல்லாதா மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான்.

கொஞ்சமாவது படித்திருந்தால், கறுப்பின மக்களிடம் இருந்து பிரிந்து சென்று குளிர் தேசங்களில் குடியேறியவர்களே வெள்ளை இனத்தவர்கள்,  என்பது அவர்களுக்கு புரிந்து இருக்கும். இப்படி இன வெறி பிடித்து அலைந்திருக்க மாட்டார்கள். பொதுவாக வீட்டில் அப்பா அம்மா இனவெறியர்களாக இருந்தால் அதனைப் பார்த்து பிள்ளைகளும் அப்படியே வளர்கிறார்கள். இதனால் தான் தமிழர்கள், “”” நல்லதொரு குடும்பம் அது பல்கலைக் கழகம்” என்று சொல்லி இருக்கிறார்கள். தமிழர்களின் நாகரிகத்தை மிஞ்சிய நாகரீகம் இந்த உலகிலேயே இல்லை !

அதிர்வுக்காக,
கண்ணன்