LUTONல் அம்மா தம்பியை கொன்றது போதாது என்று School சென்று மாணவர்களையும் சுட திட்டம் தீட்டி இருந்தான் !

தனது தாயாரையும் இரண்டு இளைய உடன்பிறப்புகளையும் கொன்றதாக ஒப்புக்கொண்ட ஒரு இளைஞன், பள்ளி சென்று அங்கே உள்ள மாணவர்களையும் சுட திட்டமிட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. 19 வயதான நிக்கோலஸ் ப்ராஸ்பர், 48 வயதான ஜூலியானா பால்கன், 13 வயதான கிசெல்லே ப்ராஸ்பர் மற்றும் 16 வயதான கைல் ப்ராஸ்பர் ஆகியோரின் மரணம் தொடர்பாக லூட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் லூட்டனில் உள்ள வாலட்ஸ் பேங்க் டிரைவ் அருகே லீபாங்கில் உள்ள ஒரு குடியிருப்பில் அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான ப்ராஸ்பர், தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி, மூன்று கொலைக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

பெட்ஃபோர்ட்ஷையர் காவல்துறையின் உதவி தலைமை காவலர் ஜான் மர்பி கூறுகையில், “இந்த வழக்கு லூட்டனில் உள்ள மக்களிடையேயும்,  நாடு முழுவதும் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

“ஜூலியானா, கைல் மற்றும் கிசெல்லே ஆகியோர் தங்கள் வீட்டிலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர், அதுவும் தனது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, பரந்த சமூகத்திற்கும் அதிகபட்ச தீங்கு மற்றும் துயரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவர் இருந்தார்..

“அவரைத் தடுத்து நிறுத்தி, ஒரு பள்ளியை குறிவைத்து தாக்குதல் நடத்தும் அவரது திட்டங்களை நிறைவேற்றுவதைத் தடுத்த எங்கள் அதிகாரிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

“LUTONல் உள்ள பள்ளிகளுடன் இணைந்து பள்ளிகள் மற்றும் பெற்றோருக்கு ஆதரவு, உதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்க லூட்டன் போரோ கவுன்சிலுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்