யார் இந்த மரீன்-லீ-பென் ? பிரான்ஸில் அவர் எப்படி பழிவாங்கப்படுகிறார்

பிரான்ஸ் நாட்டில் உள்ள தீவிர வலதுசாரி கட்சியின் தலைவராக மரீன் லீ பென் இருக்கிறார். அவர் 3 தடவை பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர். அதுபோக 2027ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் அவர் ஜனாதிபதியாக தெரிவாக பெரும் வாய்ப்புகள் உள்ள நிலையில். அவர் மீது சில குற்றச்சாட்டுகள் போடப்பட்டது. அதாவது ஐரோப்பிய ஒன்றிய நிதியை அவர் எடுத்து தனது கட்சித் தேவைக்காக பயன்படுத்தினார் என்று பிரான்ஸ் நாட்டு பொலிசார் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு, நேற்றைய தினம்(திங்கள்) முடிவுக்கு வந்தது. அவருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை, 3 லட்சம் யூரோ தண்டப் பணம். மற்றும் 5 ஆண்டுகளுக்கு அதிர்பர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று நீதிமன்றம் அறிவித்தது. அதனை எதிர்த்து லீ பென் , மேன் முறையீடு செய்ய உள்ளார். ஆனால் இதில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளது.

அதாவது அவருக்கு சிறைத் தண்டனை ஓகே, 3 லட்சம் யூரோ தண்டப்பணம் ஓகே. ஆனால் ஏன் ஜனாதிபதி தேர்தலில் 5 வருடம் போட்டியிட முடியாது என்று நீதிபதி கூறினார் என்பதே , பிரான்ஸ் நாட்டு மக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கேள்வியாக உள்ளது. அவரை வேண்டும் என்றே இப்படி ஒரு பொறிக்குள் தள்ளியுள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும் லி பென்னுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது என்பது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தான். பிரான்ஸ் நாட்டு மக்கள் இந்த நீதிமன்ற தீர்ப்பை ஒரு அரசியலாகவே பார்கிறார்கள். இதேவேளை லீ பென் , இது ஒரு அரசியல் பழி வாங்கல் நடவடிக்கை என்று, தற்போதைய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

The French far-right leader Marine Le Pen has railed against a Paris court’s “political decision” to bar her from competing for the presidency in 2027, attacking the move to ban her from running for public office as “a denial of democracy”.