மகாராணிக்கு முன்னால் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்த மெகான் மார்கிள் !

தனக்கு மாளிகையில் சரியான மதிப்புக் கொடுக்கப்படவில்லை, தன்னை ஏதோ வேலைசெய்யும் ஏவல் ஆள் போல நடத்துகிறார்கள் என்று குறை கூறியே, மெகான் மார்கள் தனது கணவரை அழைத்துக் கொண்டு, வெளியேறினார். பின்னர் லண்டனில் இருக்க தேவை இல்லை என்று கூறி அமெரிக்காவுக்கும் சென்றுவிட்டார்கள்.

இன் நிலையில் பிரித்தானிய மகாராணி 2ம் எலிசபெத் அவர்களை 2 முறை பொது வெளியில் வைத்து மெகான் மார்கிள் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. மகாராணி கலந்துகொண்ட 2 நிகழ்வில், அவருக்கு முன்னால் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார் மெகான் மார்கள்.

800 வருட பாரம்பரியமிக்க பிரித்தானிய அரச குடும்பத்திற்கு என்று பல விதி முறைகள் உள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் யார் அதிபராக வந்தாலும் அதிபரின் முதல் வெளிநாட்டுப் பயணம் பிரிட்டன் தான். அதுவும் ராஜ குடும்பத்தை சந்திக்க. மேலும் சொல்லப் போனால், அமெரிக்க அதிபரே மகாராணிக்கு முன்னால் காலுக்கு மேல் கால் போட முடியாது.

அந்த அளவு மரியாதை கொடுக்க வேண்டும். அப்படி பல விதிமுறைகள் உள்ளது. ஆனால் இவை எதனையும் மெகான் மார்கள், பின்பற்றியதே இல்லை. ஒரு முறை மகாராணியாரை பொதுவெளியில் வைத்து கட்டிப் பிடித்தார். இதனையும் மாளிகை நிர்வாகம், மெகான் மார்களுக்கு சுட்டிக் காட்டியது. ஆனால்…

உடனே தன்னை நிற வேற்றுமையாக பார்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார் மெகான் மார்கள். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குறைசொல்லி, கணவர் ஹரியை அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டார். பின்னர் பிரித்தானிய ராஜ குடும்பத்தை பற்றி TV நிகழ்ச்சியில் பேட்டி கொடுத்து பணம் சம்பாதித்தார். தற்போது பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கிறார் மெகான்.