பிரித்தானியாவின் உளவுப் பிரிவான MI-6 இன் முன் நாள் தலைவர் தெரிவித்துள்ள கருத்து ஒட்டிமொத்த ஐரோப்பிய நாடுகளையும் அதிரவைத்துள்ளது. ரஷ்யா நிச்சயம் பிரித்தானியாவை தாக்கும் என்று அவர் எதிர்வு கூறியுள்ளார். ரஷ்யாவில் இருந்து கிடைக்கப்பெற்ற உளவுத் தகவல் அடிப்படையில் அவர் இந்த கருத்தை தெரிவித்தாரா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
அவர் மேலும் தெரிவிக்கையில் …
லண்டன்: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிழக்கு ஐரோப்பாவில் தன்னை ஆதிக்கமாக்கிக்கொள்வதையும், மேற்கத்திய நாடுகளின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதையும் இலக்காகக் கொண்டிருப்பதாகக் கூறி, அதனை எதிர்கொள்ள பிரிட்டன் மீண்டும் ஆயுதம் எடுத்து தயார் ஆக வேண்டும் என முன்னாள் எம்.ஐ.6 (MI6) கண்காணிப்பு அமைப்பின் தலைவர் சர் அலெக்ஸ் யங்கர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
பிரிட்டனின் தற்போதைய நிலையை விமர்சித்த சர் யங்கர், நாட்டின் இராணுவ மற்றும் தொழில்துறை அடிப்படை பெரும்பாலும் கலைக்கப்பட்டுள்ளதையும், இது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை தெளிவாகக் கூறினார்.
“நம்மிடம் முழுமையான போரை எதிர்கொள்வதற்கான மனதாரத்தும், ஆயத்தமும் இருக்கிறதா என்ற கேள்வி என் மனதில் இருக்கிறது. நாம், மறுதொடக்கம் செய்ய வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்,” என்றார் அவர்.