அமைதிக்கு பெயர் போன மினியாபொலிஸ் நகரில், திடீரென வெடித்த துப்பாக்கிச்சூடு! பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பள்ளி வளாகம், ஒரே நொடியில் மரண ஓலத்தால் அதிர்ந்தது. ஆம்! அனன்சியேஷன் கத்தோலிக்கப் பள்ளி, ரத்த பூமியாக மாறிய கொடூரச் சம்பவம் இது!
பள்ளி ஜன்னல்கள் வழியாக வெடித்த துப்பாக்கிக் குண்டுகள்! பிரார்த்தனை செய்துகொண்டிருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் இதயங்களில் துளைத்துச் சென்றன. இந்தத் தாக்குதலில், இரண்டு அப்பாவி குழந்தைகள் உட்பட 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். மேலும், 17 குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது!
இந்த துயரச் சம்பவத்தை நிகழ்த்தியவன், ஒரு மர்மமான இளைஞன். 20 வயது மதிக்கத்தக்க அவன், இந்த கோரச் சம்பவத்திற்குப் பிறகு, தானாகவே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த கொடூரத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது!
ஒரு புனிதமான இடத்தில், இத்தகைய வன்முறை வெறியாட்டம் ஏன் நிகழ்த்தப்பட்டது? அப்பாவி குழந்தைகளின் சிரிப்பு, ஒரே நொடியில் மரண ஓலமாக மாறியது எப்படி? மினியாபொலிஸ் நகரமே அதிர்ந்து போயுள்ளது. இது, ஒரு தேவாலயத்தின் மீதான தாக்குதலா? அல்லது வேறு ஏதேனும் சதி பின்னணியில் உள்ளதா? காவல்துறை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், இந்த துயரச் சம்பவம், பல கேள்விகளை எழுப்பியுள்ளது.