ரஷ்யாவின் மற்றும் அமெரிக்காவின் பொது எதிரியாக ஐரோப்பிய நாடுகளே இருக்கிறது என்று, ரஷ்ய உளவாளி(KGB) நபர் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. இன் நபர் எக்ஸ் -KGB ஆவார். அவர் ரஷ்ய புலனாய்வு சேவையில் இருந்து வெளியேறிய நபர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
முன்னாள் ரஷ்ய இரகசிய சேவைத் தலைவர் யெவ்கெனி சவோஸ்ட்யானோவ், உலக அரசியல் அமைப்பில் ரஷ்யா, சீனா, அமெரிக்கா இணைந்து ஒரு புதிய நிலவரத்தை உருவாக்கலாம், இது ஐரோப்பாவை அழிவிற்கு தள்ளும் என்று எச்சரித்துள்ளார்.
மாஸ்கோவில் கேஜிபி (KGB) அமைப்பின் தலைவர் பதவியில் இருந்த சவோஸ்ட்யானோவ், ஐரோப்பா விரைவாக விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாக கூறினார். விளாடிமிர் புடின் விரிவாக்க நோக்கங்களை நினைக்காமல் இருந்தால், அந்த கண்டம் முக்கியத்துவம் இல்லாத நிலைக்கு தள்ளப்படும் என்றார்.
உலக அரசியல் மாற்றத்தை எதிர்கொள்ள ஐரோப்பிய தலைவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறினால், டொனால்டு ட்ரம்ப் மற்றும் புடின் நடத்திய பேச்சுவார்த்தைகள் ஐரோப்பாவை முழுவதுமாக புறக்கணிக்கும் வகையில் முடிவுக்கு வரக்கூடும்.
இதனை எதிர்க்க, ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கவும், உலகளாவிய அச்சுறுத்தல்களை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் பரப்பலை நடத்தவும் முன்வர வேண்டும் என்று சவோஸ்ட்யானோவ் வலியுறுத்தினார்.
இத்தாலிய ஊடகம் Corriere Della Serraக்கு அளித்த நேர்காணலில், ஐரோப்பிய தலைவர்களுக்கு அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்:
“இன்று நீங்கள் ரஷ்யா மற்றும் புதிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். இவை இரண்டும் உங்கள் அடிப்படை மதிப்புகளை வெறுக்கின்றன. அவர்களுக்கு நீங்கள் ஒரு பொதுவான எதிரியாக இருக்கிறீர்கள். நீங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளீர்கள்.”
“நீங்கள் சந்திக்கும் ஆபத்துக்களை உணர முடியவில்லை என்று எனக்குப் பயமாக இருக்கிறது… இதன் விளைவாக, உங்கள் ஜனநாயக மதிப்புகள் முதன்மையாக முக்கியத்துவம் இழக்கும் நிலை உருவாகலாம்.”
அமெரிக்கா தனது உலக அரசியல் பாதிப்புகளை குறைக்கும் முடிவை எடுத்திருப்பதால், புதிய ஒரு ‘உலக அரசியல் நிலவரம்’ உருவாகுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.