பள்ளிக்கூடம் வந்தால் , எங்கள் எல்லோரையும் கட்டிப் …. பிடிப்பான்… ஹாய் சொல்லுவான் ! அவனை எங்களால் எப்படி மறக்க முடியும் ? என்று ஆசிரியர்கள் அனைவரும் …கண்ணீர் வடிக்கிறார்கள் ! இப்படி சுட்டியான , மிகவும் அழகான இந்த பையனை கொல்ல அவனது அம்மாவுக்கு எப்படி மனம் வந்தது ?
இந்த உலகத்தில் நடக்கும் சில விடையங்களுக்கு பதிலே இல்லை. அதுபோலவே இந்த 5 வயது சிறுவன் லிங்கன் பட்டனின் சோகக் கதையும் உள்ளது. வீட்டில் கூச்சல் குழப்பம், உடனே ஏதாவது செய்யுங்கள் என்று அயலவர்கள் 999 க்கு அறிவிக்க , பிரித்தானிய பொலிசார் விரைந்தார்கள்.
பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்ற மறு செக்கனே, பரா மெடிக்ஸை அழைத்தார்கள். உயிர் காக்கும் மற்று படு விரைவாக செயல்படும் பரா மெடிக்ஸ் யுனிட் அங்கே வந்தும் 5வயது நிரம்பிய லிங்கனை காப்பாற்ற முடியவில்லை. உண்மையில் அங்கே என்ன நடந்தது என்பதனை பொலிசார் இன்றுவரை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தவே இல்லை.
ஆனால் லின் காலினின் அம்மா, தனது பிள்ளையை தானே கொன்றேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். அது தற்செயலாக நடந்த விடையம் என்றும். திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். அதாவது ஏதோ கவனக் குறைவு என்ற , அனுதாப சட்டத்தினுள் தன்னை தக்க வைக்க பார்கிறார்.
உண்மையில் அங்கே என்ன நடந்தால் தான் என்ன ? ஒரு அம்மா அல்லது அப்பா, தனது பிள்ளையை கண்ணின் இமை காப்பது போல காக்க வேண்டும். அதுவே உலக நியதி. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. பிள்ளை வரம் இன்றி எத்தனை கோடிப் பேர் தவிக்கிறார்கள். ஆனால் பெற்ற பிள்ளையை காப்பாற்றாமல் இப்படி பலி கொடுப்பது என்பது ஏற்கவே முடியாத குற்றம் ஆகும்.
அந்த வகையில் பிரித்தானிய நீதிமன்றம் அம்மாவுக்கு தகுந்த தண்டனையை வழங்க உள்ளது. எங்கே நீதி தவறினாலும் பிரித்தானியவை பொறுத்தவரை நிச்சயம் தண்டனை கிடைத்தே தீரும் . அப்படியான இறுக்கமான சட்ட திட்டங்களை கொண்ட நாடு பிரித்தானியா … சிறுவன் லிங்கனின் அத்மா ஷாந்தி அடைய ,ஓம் ஷாந்தி ஷாந்தி …