ரஷ்ய ஆதிக்கத்தை காலி செய்யும் GANDALF-4 Prototype Sensor !

ரஷ்ய வான் பரப்பு மற்றும் ரஷ்யாவை அண்டிய பகுதிகளில், ஐரோப்பிய விமானங்கள் பயணம் செய்யும் வேளைகளில், குறித்த விமானத்தின் GPS சிஸ்டத்தை ரஷ்யா ஹக் செய்து, அந்த விமானத்தை விபத்தில் தள்ள, முடியும் என்று நிரூபித்துள்ளது.

சமீபத்தில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் சென்ற விமானம், சில நிமிடங்கள் GPS சிக்னலை இழந்து எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்தது. ஆனால் விமானி சாதூரியமாக , அந்த விமானத்தை பிரிட்டனுக்குள் கொண்டு வந்து விட்டார்.

இது ரஷ்யாவின் வேலை என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றம் சாட்டிய நிலையில். அப்படியான ஒரு பெரும் ஆயுதம் ஒன்றை ரஷ்யா தாயாரித்து வைத்திருக்கிறது. இதனை காலி செய்யவே தற்போது நேட்டோ நாடுகள் ஒன்றிணைந்து, GANDALF-4 என்ற ஒரு ஆயுதத்தை கண்டு பிடித்துள்ளார்கள்.

இதனூடாக எந்த ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி, விமானங்கள் ரஷ்யா மீது பறக்க முடியும். இது அமெரிக்காவுக்கு விழுந்து இருக்கும் பேரிடியாகும். ஏன் என்றால், முன்னார் இது போல ஏதாவது ஆயுதத்தை செய்யவேண்டும் என்றால் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவையே நாடவேண்டி இருந்தது. ஆனால் தற்போது தாமாகவே ஆயுத உற்பத்தியில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட ஆரம்பித்து விட்டது.