new star born HH 30: புதிதாக பிறந்த ஒரு சூரியனை காணும் வாய்ப்பு உங்களுக்கு வந்துள்ளது !

புதிதாக தோன்றிய நட்சத்திரம் ஒன்று தற்போது வாணில் தென்படுகிறது. மிகவும் குறைந்த ஒளியுடன், விட்டு விட்டு ஒளிரும் இந்த நட்சத்திரத்தை நம்மால் இலகுவாக கண்டு பிடிக்க முடியும்.

இந்த விண்வெளி , எந்த அளவு பெரியது என்பது இன்றுவரை புரியாத ஒரு புதிராகவே உள்ளது. காரணம் ஒரு கிரகத்தில் இருந்து அடுத்த கிரகம் என்பதும் ரில்லியன் மைல் தொலைவில் உள்ளது. சிலர் இந்த விண்வெளி விரிந்து கொண்டு செல்வதாக ஒரு கருத்தை தெரிவித்து வருகிறார்கள். 1946ம் ஆண்டு T-கோரோன் என்று அழைக்கப்படும் ஒரு இடத்தில் பெரும் வெடிப்பு ஒன்று ஏற்பட்டது. அங்கே பெரும் வெளிச்சம் தோன்றியதை பூமியில் உள்ள விஞ்ஞானிகள் அவதானித்தார்கள்.

தற்போது அந்த இடத்தில் அதாவது 79 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு சிறிய நட்சத்திரம் தோன்றியுள்ளதை விஞ்ஞானிகள் தற்போது அவதானித்துள்ளார்கள். அந்த நட்சத்திரத்தின் ஒளி மிகவும் மங்கலாக உள்ளது. இருப்பினும் அது ஒரு சூரியன் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், அந்த நட்சத்திரத்தில் இருந்து அதன் ஒளி ,பயணித்து பூமிக்கு வந்தடைய 70 ஆண்டுகளுகு மேல் ஆகிறது. ஒளியானது செக்கனுக்கு 1 லட்சத்தி 68,000 ஆயிரம் KM செல்லும். அப்படி பார்த்தால் இந்த ஒளி பூமிக்கு வரவே 70 ஆண்டுகள் பிடிக்கிறது என்றால், எந்த அளவு தொலைவில் அந்த நட்சத்திரம் இருக்கும் என்பதனை நீங்கள் கற்பனை செய்தே பார்க முடியாது.

மேலும் சொல்லப் போனால், வெடிப்பு ஏற்பட்டதை நான் உணரவே 70 ஆண்டுகள் பிடித்துள்ளது. அதிலும் வேடிக்கையான விடையம் என்னவென்றால் ., முதலில் இந்த நட்சத்திரம் தோன்ற ஆரம்பித்தவேளை, பூமியில் மனித இனமே இல்லை. என்பது தான் உண்மை. அதன் பின்னர் நடந்த சில நிகழ்வுகளை தான், நாம் பார்த்து இருக்கிறோம். அதாவது அந்த இடத்தில் முதலில் வாயுக்கள் உருவாகி அவை விரிவடைந்து பின்னர் ஒரு வெடிப்பு ஏற்பட்டு, அதன் பின்னரே எரியும் சூரியன் ஒன்று உருவாகவேண்டும். இவை அனைத்தும் ஆரம்பித்தவேளை பூமியில் உயிரினங்கள் தோன்றியே இருக்காது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதனை கேட்க்கவே புதுமையாக இருக்கிறது அல்லவா ? மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள் ? ஏன் இறக்கிறார்கள் ? இடைப்பட்ட காலத்தில் என்ன நடக்கிறது ? எல்லாமே மாயை … பொதுவாக மனிதர்கள், ஒரு புரோகிராம் செய்யப்பட்ட பாவைகள் போலவே இருக்கிறார்கள். உணவு உடை, காதல், காமம், பணம் சேர்ப்பது என்ற சில விடையங்கள் மட்டுமே அவர்களின் மூளையில் உள்ள புரோகிராம். அதனை மீறி மிகச் சிலரே விண்வெளி, நட்சத்திரங்கள் , பால் வெளி நட்சத்திரக் கூட்டங்கள் தொடர்பாக சித்திக்கிறார்கள். எதுவுமே இல்லாத ஒரு அண்ட வெளி. அதில் மிதக்கும் பூமி… அது சுற்றுவதால் ஒரு புவி ஈர்ப்பு விசை. அருகே சூரியன் , பூமி சுற்றுவதால் உருவாகிறது நேரம்.

நேரத்தை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் அதனை வளைக்க முடியும் அல்லது மெதுவாகச் செல்ல வைக்க முடியும். நாம் வேகமாகச் சென்றால். ஒரு கிரகத்தில் இருப்பவர்கள் மற்றைய கிரகங்களுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது. எனவே மக்கள் அனைவரும் பூமி என்ற ஒரு பூட்டிய சிறையில் அடைபட்டு கிடக்கிறோம். அது தான் உண்மை.
அதிர்வுக்காக
கண்ணன்