வட கொரியாவின் பல நூறு ராணுவத்தினர் ரஷ்யாவுக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள். இது நாள் வரை சிறிய தொகையில் மிகவும் ரகசியமாக ராணுவத்தை வட கொரியா ரஷ்யாவுக்கு கொடுத்து வந்தது. ஆனால் முதல் தடவையாக பல நூறு படைகளை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது வட கொரியா.
ரஷ்யாவில் உள்ள “கேஷ்” என்னும் பெரு நிலப் பரப்பை உக்ரைன் ராணுவம் கைப்பற்றி வத்திருந்த நிலையில். அந்த இடத்தை கடந்த மாதம் ரஷ்ய படைகள் மீட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் சில இடங்களில் பின்வாங்கிய உக்ரைன், திடீரென மீண்டும் தாக்கி, சில இடங்களை கைப்பற்றிவிட்டது. இதனை ரஷ்யா சற்றும் எதிர்பார்கவில்லை.
இதற்கு தலைமை தாங்கிய ரஷ்ய ராணுவ ஜெனரைலும், மொஸ்கோவில் வைத்து போட்டு தள்ளியது உக்ரைன். இந்த நிலையில் இந்த ராணுவ நகர்வும் மிகவும் ஆபத்தாக பார்கப்படுகிறது. காரணம் வட கொரிய மக்கள் தொகை மிக மிக அதிகம். அதிலும் கட்டாய ராணுவ சேவை இருப்பதால், அதன் படை பலமும் அதிகம். இன் நிலையில் வட கொரியா ரஷ்யாவுக்கு உதவுவது போல, அமெரிக்காவின் எதிரி நாடுகளுக்கும் தனது ராணுவத்தை அனுப்பி உதவி புரியலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தற்போது ரஷ்யா, வட கொரியா மற்றும் பெலரூஸ் ஆகிய 3 நாட்டு ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் ராணுவம் தனியாக போராடி வருகிறது. அமெரிக்காவும் உக்ரைனை கை விட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே உதவி வருகிறது. இதேவேளை ரஷ்யாவோடு மிக நெருங்கிய உறவில் உள்ள கியூபா நாடும் ராணுவத்தை அனுப்பினால், நிலமை தலை கீழாக மாற வாய்ப்புகள் உள்ளதோடு, ஒரு பெரும் போர் ஒன்று ஆரம்பிக்கும் !. அது 3ம் உலகப் போராக இருக்க பெரும் வாய்ப்புகள் உள்ளது.