லூயிஷாமில் 63 வயது மனிதர் கொலை – வெடித்த கலவரம்!

லண்டனின் தென்கிழக்கு பகுதியான லூயிஷாம் ஹை ஸ்ட்ரீட்டில் ஒரு 63 வயது மனிதர் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தார். இந்த சம்பவம் சனிக்கிழமை (மார்ச் 1) இரவு, The Watch House பப் வெளியே “கலவரம்” நடந்த பின்னர் ஏற்பட்டது. போலீஸ் இரவு 8:39 மணியளவில் வந்தனர். காயமடைந்த மனிதரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அவர் பின்னர் மரணமடைந்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு 42 வயது ஆண் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தென் லண்டனில் உள்ள போலீஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். போலீஸ் தகவலின்படி, இந்த தாக்குதல் ” The Watch House pub ”  பபில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து நடந்ததாக நம்பப்படுகிறது.

மெட் போலீஸ் பேச்சாளர் இந்த சம்பவத்தைப் பற்றி விவரித்து, “63 வயது மனிதர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் காணப்பட்டார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். போலீஸ் இப்போது சம்பவ இடத்தில் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர் என போலிசார் தெரிவித்தனர்.

விசாரணையை மேற்கொண்டு வரும் மெட் போலீஸின் டிடெக்டிவ் சீப் இன்ஸ்பெக்டர் கிரெய்க் மேஜி, “இந்த சம்பவம் பரபரப்பான தென்கிழக்கு லண்டனில் நடந்துள்ளது. லூயிஷாம் ஹை ஸ்ட்ரீட் அல்லது The Watch House பபில் இருந்தவர்கள் எவருக்காவது தகவல் இருந்தால், அதைப் பகிர்ந்தால் உதவியாக இருக்கும்” என்று கூறினார். தகவல்களைப் பகிர 101 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், அநாமதேயமாக தகவல்களைப் பகிர Crimestoppers என்ற தொண்டு நிறுவனத்தை 0800 555 111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போலிசார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.