மியான் மார் மற்றும் தாய்லாந்தை தாக்கியுள்ள நில நடுக்கத்தால் இதுவரை 1,644 பேர் இறந்துள்ளதாகவும். மேலும் 1,200 பேரை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகியுள்ள இந்த நில நடுக்கம், மியான்மார்(பர்மா) தொடக்கம் தாய்லாந்துவரை உணரப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் தொடக்கம் பெரும் கட்டங்கள் எல்லாம் ஈடாடி அப்படியே உடைந்து நிலத்தில் விழுந்துள்ளது. இதன் காரணத்தால் தான் பல உயிர்கள் கொல்லப்பட்டுள்ளது.
வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதவர்கள் மற்றும் சிறுவர்கள் இதில் சிக்கி பலர் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தோனேசியா பண்டாராட்சி போன்ற இடங்களில் அடிக்கடி பெரும் நில நடுக்கம் ஏற்படுவது வழக்கம். அங்கே உலகின் தகடுகள் மோதுவது வழக்கமாகி விட்டது.
கண்டங்களை தாங்கி நிற்கும் மற்றும் கடலுக்கு அடியில் இருக்கும் இந்த டெக்டோனிக் பிளேட் என்று அழைக்கப்படும் தகடுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் பெரும் நில நடுக்கம் ஏற்படுகிறது. இது கடலுக்கு அடியில் நடந்தால் அது சுணாமியாக மாறி பெரும் அலைகளை தோற்றுவிக்கும்.
Source BBC WORLD: https://www.bbc.co.uk/news/live/c4gex01m7n5t