பாக்கிஸ்தானின் J10 போர் விமானம், இந்திய மிக் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ள சம்பவம், உலக அரங்கில் பேசுபொருளாக அமைந்துள்ளது. காரணம், சீனா தான் தயாரித்து வைத்துள்ள அதி நவீன சில போர் தளபாடங்களை தற்போது பாக்கிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. இதில் J10 போர் விமானத்தின் ஏவுகணையும் ஒன்றாகும். இது தரம் உயர்த்தப்பட்ட ஏவுகணை. இந்த விடையம் இந்திய பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியாது. இதனால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதேவேளை..
இதேவேளை சீனாவின் ஏ.வி.ஐ.சி போர் விமான தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் 40% சத விகிதத்தால் திடீரென அதிகரித்துள்ளது. இதற்கு முழுக் காரணம் இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தான். (Shares of China’s AVIC Chengdu Aircraft rose 40% this week) ஏன் எனில் இந்த நிறுவனத்தின் ஏவுகணைகளை தான் பாக்கிஸ்தான் பயன்படுத்துகிறது.
எப்பொழுது இப்படி ஒரு யுத்தம் வெடிக்கும் என்று காத்திருந்த சீனாவுக்கு, வாயில் அவல் பொரி கிடைத்த விடையமாக மாறியுள்ளது. அவசரப்பட்டு இந்தியா தனது விமானப் படையை பாக் எல்லைக்குள் அனுப்பியது மிக முட்டாள் தனமான விடையமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மாறாக தனது வீரர்களை , இந்தியா அனுப்பி தாக்கி இருக்க முடியும். மேலும் சொல்லப் போனால்…
பாக்கிஸ்தான் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ராஃபுல் போர் விமானங்களை வாங்கி வைத்திருக்கிறது. ஆனால் இதுவரை அதனை அவர்கள் பாவிக்கவில்லை. எதிரியின் வான் படையின் பலத்தை முற்றாக அறிந்த பின்னரே , இந்தியா களத்தில் இறங்கி இருக்கவேண்டும். பாக்கிஸ்தானை சீனா கை விட்டு விட்டது என்று , தமிழ் ஊடகங்களில் வந்த செய்திகள் அனைத்தும் பொய். சீனா தனது ஆயுதங்களை போர் களத்தில் நேரடிய பரீட்ச்சித்துப் பார்க்க இதுவே சரியான தருணம். இதற்காக தான் பல வருடங்களாக சீனா காத்திருந்தது.
தற்போது பாக்கிஸ்தானுக்கு சீனா வான் எதிர்ப்பு, ஆயுதங்களை மற்றும் விமானத்தில் இருந்து எதிரி விமானத்தை தாக்கும் 5ம் தலை முறை ஏவுகணைகளை கொடுத்துள்ளது. எனவே இந்தியா எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்ற பல இழப்புகளை சந்திக்கவேண்டி இருக்கும் ! தரம் உயர்த்தப்பட்ட PL10 மற்றும் PL15 ஏவுகணைகள் பாக் விமானத்தில் தற்போது உள்ளது. இது இந்திய போர் விமானங்களை துல்லியமாக தாக்க வல்லவை. சீனாவின் 5ம் தலை முறை ஏவுகணை ஆகும். கீழே படங்கள் இணைப்பு.