இந்தியா பாக் மீது தொடுத்துள்ள போரை, SPY சாட்டலைட் ஊடாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் மிக மிக உண்ணிப்பாக கவனித்து வருகிறார்கள். காரணம் சீனா தான். ஏன் எனில் இந்தியா தற்போது பாக்கிஸ்தானோடு போர் புரிந்தாலும், டெக்னிக்கலாகச் சொல்லப் போனால் இந்தியா போர் புரிவது சீனாவுடன் தான். காரணம் சீன அதி நவீன ஆயுதங்களை தான் பாக்கிஸ்தான் பாவிக்கிறது.
ஏற்கனவே இந்தியாவின் மிக் 29 ரக 2 போர் விமானங்களை பாக்கிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளது, அமெரிக்காவையே நடுங்க வைத்துள்ளது. காரணம் சீனாவின் ஏவுகணைகள். தற்போது சீனா கொடுத்துள்ள ஏவுகணைகள், மிக் விமானங்களை தாக்கி அழிக்கவல்லவை என்பது தெளிவாகப் புலப்படுகிறது. காரணம் அமெரிக்க CIA உளவுப் பிரிவு, விழுந்த இந்திய விமானங்களின் புகைப்படங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி உறுதி செய்துள்ளார்கள்.
தனது நவீன ஆயுதங்களை நேடியாக பாவித்து பார்க இதுவே சரியான களம் என தெரிந்துகொண்ட சீனா, தேவைக்கு அதிகமாகவே ஆயுதங்களை பாக்கிஸ்தானுக்கு வழங்கியுள்ள விடையம் பெரும், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா இதனை எப்படி சமாளிக்கும் என்பது ஒரு புறம் இருக்க, அமெரிக்க மறைமுகமாக பல உளவுத் தகவல்களை இந்தியாவுக்கு பரிமாறி வருவது குறிப்பிடத்தக்க விடையம். ஆனால் இந்தியா தனது தாக்குதல் திட்டத்தை மாற்றுவதே நல்லது.