7ம் திகதி சீறிப் பாய்ந்த 60 இந்திய போர் விமானத்தில் எத்தனை நாடு திரும்பியது ? அதிரும் தகவல் !

இந்திய பாக் அதிகாரிகள் சொன்ன தகவல், எல்லையில் இருக்கும் வெளிநாட்டு நிருபர்கள் சொன்ன தகவல், ஆதார புகைப்படங்கள் என்று.. இந்த செய்தி நடு நிலையாக எழுதப்படுகிறது. உண்மையை மக்கள் அறியவேண்டும் அல்லவா ?  Source: 

1932ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் திகதி, இந்தியா தனது முதல் விமானப்படையை அமைத்தது. அன்று முதல் இன்றுவரை அது மிகவும் பலமான ஒரு நிலையில் உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவசரமாக மோடி அரசு, தனது BJPயின் செல்வாக்கை உயர்த்த, சரியாக திட்டமிடாமல் நடத்திய தாக்குதலால் இந்தியா 5 போர் விமானங்களை இன்று இழந்துள்ளது. இதனை இந்திய அரசு மறுக்கவும் இல்லை, அதேவேளை ஏற்றுகொள்ளவும் இல்லை. மவுனமாகவே இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக புகைப்படங்கள் இன்ரர் நெட்டில் கசிந்த வண்ணம் உள்ளது !

இன்றைய திகதிக்கு இந்தியாவில் 1 லட்சத்தி 35,000 ஆயிரம் விமானப்படை வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிடம் 1,926 போர் விமானங்கள் உள்ளது. மேலும் பல நூறு, துருப்பு காவி விமானங்கள், வேவு விமானங்கள் என்று பல நூறு விமானங்கள் இருக்கிறது. மேலும் சொல்லப் போனால், மேலதிகமாக 1 லட்சம் ரிசேவ் விமானப்படை வீரர்களும் இருக்கிறார்கள். இந்த நவீன யுகத்தில், ஆட்கள் பலம் பெரிது அல்ல. டெக்னாலஜி தான் பெரிதாக உள்ளது. April 22 இந்தியாவில் பாக் ஆதரவு பெற்ற, ஜிகாடிகள் சுட்டதில், 25 அப்பாவி இந்தியர்கள் பலியாகி இருந்தார்கள்.

இதற்கு பதில் நடவடிக்கையாக, 7ம் திகதி அதிகாலையில் இந்தியா தனது விமானப்படையை பாக்கிஸ்தான் ஆட்சி செய்யும் காஷ்மீர் பகுதிக்குள் அனுப்பியுள்ளது. சீறிப்பாய்ந்த இந்த 60 இந்திய போர் விமானங்கள், பாக்கிஸ்தானுக்குள் ஊடுருவ. பதிலுக்கு பாக்கிஸ்தான் 42 விமானங்களை வழி மறிக்க அனுப்பியுள்ளது. இந்த 60 இந்திய போர் விமானத்தில் 14 French-made Rafales விமானங்கள் இருந்துள்ளது. மீதம் 46 விமானத்தில் ஒரு SU-30 அடங்கலாக MIG-29 ரக விமானங்கள் சென்றுள்ளது.

பதிலுக்கு பாக்கிஸ்தான் ஏவிய விமான கூட்டத்தில், அமெரிக்க தயாரிப்பான American F-16s மற்றும் , Chinese JF-17s மற்றும் சீனாவின் அதி நவீன J10C விமானமும் குழுவில் இருந்துள்ளது.  அதி வேகத்தில் வந்த 42 பாக் விமானங்கள் இந்திய விமானங்களை வழி மறிக்க முயன்று,  பாக் விமானங்கள் சட்டென ஏவுகணைகளை ஏவிவிட்டார்கள். அதிலும் குறிப்பாக சீன தயாரிப்பான J10C விமானம் PL15 ரக ஏவுகணையை ஏவி விட்டது. இவை 300KM வரை திரத்திச் செல்ல வல்லவை. இதனால் பாக்கிஸ்தான் விமானங்களோடு, பிரான்ஸ் தயாரிப்பான ராபிள் விமானங்கள் சண்டை போட, இலக்குகளை தாக்க சில இந்திய MIG-29 விமானங்கள் சென்றுவிட்டது.

போர் விமானங்கள் பொதுவாக வானில் பறக்க ஆரம்பித்த பின்னர், எதிரி நாட்டு ராடர் கருவிகளில் விழும் போது தான், அது எந்த வகையான போர் விமானம் என்பதனை எதிரி நாடு அறிந்துகொள்ளும். அந்த வகையில், இந்தியா தமது விமானங்களை நோக்கி வருவது, சீன மற்றும் அமெரிக்க தயாரிப்பு விமானங்கள் என்பதனை உடனே கண்டு பிடித்து, தனது இந்தியப் படைகளுக்கு எச்சரிக்கை அனுப்புகிறது. இந்த நேரத்தில் தான் சடுதியான முடிவு எடுக்கப்பட்டு. ராஃபில் விமானங்கள் சண்டை போட்டு ஏனைய விமானங்களை பாதுகாக்க.  MIG-29 விமானங்கள் தரை தாக்குதலுக்கு சென்றுள்ளது.

இரு நாட்டு அறிக்கையின் படி, இந்த படு பயங்கரமான வான் போர் 1 மணி நேரம் இடம்பெற்றுள்ளது. J10C சீன போர் விமானம், ஒரு இந்திய விமானத்தை LOCK செய்து ஏவுகணையை ஏவினால், உடனே இந்திய விமானத்தில் உள்ள கருவிகள் அதனை அடுத்த செக்கனே கண்டு பிடித்து பைலட்டை Alert செய்யும். இதில் இருந்து தப்ப, பைலட் 2 பொறி முறைகளை கையாள்வது வழக்கம். ஒன்று,  figheter decoy எனப்படும் , சிறிய கருவிகளை ஏவ முடியும்.  எதிரி விமானத்தில் இருந்து வந்த ஏவுகணை,  அதனை பின் தொடர வைத்து தப்புவது. இல்லையென்றால், ஏவுகணையிடம் இருந்து தப்ப, படு வேகமாகவும்,  மற்றும் வளைவு நெளிவாகச் சென்று, ஏவுகணையை செயல் இழக்கச் செவது.

தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றால்,  அமர்ந்து இருக்கும் ஆசனத்தை Eject செய்யவும் முடியும். அப்படி என்றால் விமானி தப்பித்துக் கொள்வார், ஆனால் விமானம் வெடித்து விடும்.  இது போலத் தான் 3 இந்திய ராஃபில் விமானங்கள், இந்திய எல்லையான Pulwama district வந்து விழுந்து நொருங்கியுள்ளது. இதன் பாகங்களின் படங்கள் தான் தற்போது வெளியாகி வருகிறது. ஆனால் இந்த உண்மையை சொல்லப் போனால், இந்தியர்கள் அதனை ஏற்க்க மறுக்கிறார்கள்.

மேலும் விமானிகள் இந்திய எல்லைக்குள் வந்து விட்டதால், பாக் ராணுவத்திடம் பிடி படவில்லை. அப்படி பாக் ராணுவத்திடம் சிக்கி இருந்தால். அவர்களை TVல் காட்டியே இந்தியாவின் மானத்தை வாங்கி இருப்பார்கள் பாக்கிஸ்தானியர்கள். மேலும் விழுந்து நொருங்கிய விமானங்கள் 3ம் இந்திய எல்லைக்குள் தான் வந்து விழுந்துள்ளது. இதனால் பாக் அரசால், இதனை உறுதிசெய்ய முடியவில்லை.

சரியாக சிந்தித்து இருந்தால், 60 இந்திய போர் விமானங்களை பாக் எல்லைக்குள் அனுப்புவதை விடுத்து, தற்கொலை ட்ரோன்களை அனுப்பியும் மிக மிக துல்லியமாக தாக்குதல் நடத்தி இருக்க முடியும். மேலும் சொல்லப் போனால் ட்ரோன்களை வீழ்த்தும் அளவிற்கு பாக் ராணுவத்திடம் பெரிய அளவில் எலக்ரானிக் ஆயுதங்கள் இல்லை. அமெரிக்கா போன்ற நாடுகள்,  ஆப்கான், ஈராக், என்று பல நாடுகளில் ட்ரோன் மூலமே, ISIS தீவிரவாதிகளை போட்டுத் தள்ளுகிறார்கள்.

மேலும் குறித்த 7ம் திகதி அதிகாலை, இந்திய விமானப்படைக்கு சொந்தமான SU-30 வேவு விமானமும் சென்றுள்ளது. அவர்கள் வானில் பறந்தபடியே பல உளவுத் தகவல்களை சேகரித்து நேரடியாக இந்த 60 போர் விமானங்களுக்கும் கட்டளை நிலையத்திற்கு தகவல் அனுப்புவார்கள். ஆனால் இந்த SU-30 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல புலனாய்வு தகவல்கள் கிடைக்காமல் போய் விட்டது.

இதனுடன் சேர்ந்து ஒரு MIG-29 விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் மீதமுள்ள 55 விமானங்கள் பாக் விமானத்தோடு சண்டையிட்டு,  2 பாக் விமானங்களை சுட்டு வீழ்த்தியதுடன். தாக்கச் சென்ற நிலைகள் மீது தாக்குதல் நடத்தி திரும்பியுள்ளது. ஆனால் இந்த அவசரமான தாக்குதல் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தெரியவில்லை. மேலும் சொல்லப் போனால் வந்த 45 பாக் விமானங்களில், எந்த ஒரு F 16 அல்லது J17 அல்லது J10C விமானமும் சுட்டு வீழ்த்தப்படவே இல்லை. மாறாக தரம் குறைந்த 2 பாக் விமானங்களே சுடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒப்பிடும் போது இந்தப் போரில், பாக்கிஸ்தானின் இழப்பு என்பது மிகவும் குறைவு.

பாக்கிஸ்தானை பாதுகாப்பது , சீனா கொடுத்துள்ள HQ9 வான் எதிர்ப்பு சிஸ்டம். இதில் பல குறைபாடுகள் உள்ளது. இவை பொதுவாக ட்ரோன்களை சரியாக கண்டு பிடித்து தாக்கி அழிப்பது இல்லை. எனவே இந்தியா மிகவும் சாதூரியமாக காய் நகர்த்தி இருக்க முடியும். ஆனால் ஆட்சியில் உள்ள BJP தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள, திடீர் திட்டம் ஒன்றை தீட்டி. இறுதியாக பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் உள்ளது போக. 60 இந்திய விமானப் படை வீரர்களை, பகடைக் காய்களாக மாற்றியுள்ளது. இந்திரா காந்தி அம்மையார் ஆட்சியில் இருந்தவேளை, இலங்கை, பாக்கிஸ்தான், வங்க தேசம், என்று அண்டைய நாடுகளை பெரும் அச்சத்தில் வைத்திருந்தார். 4 JUNE 1987 , அன்று இந்தியாவின்(click her to read about this)  (Indian Air Force)  Antonov An-32 military transport aircraft,  இலங்கை வான் பரப்பினுள் அத்து மீறி நுளைந்து, யாழ்ப்பாண தமிழர்களுக்கு உணவுப் போடலங்களை போட்டது.

இலங்கை அரசு வாயை பொத்திக் கொண்டு இருந்தது. பெரும் அச்சம் ஏற்பட்டது. இந்தியா என் நேரமும் இலங்கைய தாக்கலாம் என்று சிங்கள அதிபர்கள் நடுங்கினார்கள். ஆனால் இன்று என்ன நடக்கிறது ? இலங்கை ராணுவம் இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்று படகுகளை பறித்து, இந்தியாவை முட்டாளாக்கி வருகிறது. சரியான திடமான தலைவர்கள் இந்திய அரசில் இல்லை. திட்டமிடல் வழி நடத்தல், ஆலோசனை என்று எதுவுமே இல்லை. இதுவே இன்றைய நிலை.

ரஷ்யா இந்தியாவுக்கு கொடுத்துள்ள ஸ்400 வான் எதிர்ப்பு சிஸ்டம் ஒன்றை, பாக் எல்லைக்கு நகர்த்தி விட்டு, ஏதோ கம்பியூட்டர் கேம் விளையாடுவது போல ஒரு நாளைக்கு 10 ட்ரோன்களை அனுப்பி பாக்கில் உள்ள தீவிரவாதிகளின் நிலையை இந்தியா மிகவும் சிம்பிளாக தாக்கி அழிக்க முடியும். இதனை பாக்கிஸ்தானால் தடுக்க முடியாது. மேலும் பாக் இந்தியாவுக்குள் ட்ரோன்களை அனுப்பினால், அதனை ஸ்400 சிஸ்டம் மிகவும் துல்லியமாக தாக்கி அழிக்கும். எனவே இந்தியா பாதுகாப்பாக இருக்கும். இப்படியான Technology warfare தான் இனி வெல்லுமே தவிர, எண்ணிக்கை அல்ல.

இதை எல்லாம் எழுதப் போனால் … வா டா… வா… வந்து இந்திய பாதுகாப்பு அமைச்சுக்கு பாடம் எடு என்று சிலர் வைவார்கள். அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.