தமது நாட்டு வான் பரப்பில் அனுமதி இன்றி பறக்கும் எந்த ஒரு நாட்டின் போர் விமானத்தையும் உடனே சுட்டு வீழ்த்த போலந்து NATO படைகளுக்கும் தனது ராணுவத்திற்கு புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனால் புது போர் பதற்றம் ஒன்று உருவாகியுள்ளது. சில வாரங்களாகவே ரஷ்ய போர் விமானங்கள் போலந்து எல்லைக்கு வருவதும், அதனை இடை மறிக்க NATO படை விமானங்கள் புறப்பட்ட மறு செக்கனே அவை திரும்பவும் ரஷ்ய எல்லைக்குள்ளே செல்வது என்று, ரஷ்யா பெரும் பூச்சாண்டி காட்டி வருகிறது.
என்ன நடக்கிறது ?
மாஸ்கோ: உக்ரைனில் நடந்து வரும் போரின் விளைவாக, ரஷ்யாவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க், “எங்கள் வான் எல்லைக்குள் வரும் எந்தவொரு பறக்கும் பொருளையும், கேள்வியே இல்லாமல் சுட்டு வீழ்த்துவோம்” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது, ரஷ்யாவுடனான நேரடி மோதலைத் தூண்டும் ஒரு அபாயகரமான முடிவாகப் பார்க்கப்படுகிறது.
செக் குடியரசு அதிபரின் கடும் எச்சரிக்கை!
போலந்தின் இந்த அதிரடி முடிவுக்கு முன், நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கையை எடுக்க வேண்டும் என செக் குடியரசு அதிபர் பெட்ர பவெல் கோரிக்கை விடுத்தார். “நேட்டோ படைகள், ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் வான் எல்லைக்குள் நுழைந்தால் அவற்றை சுட்டு வீழ்த்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். இந்த ஆலோசனையை நேட்டோ படைகள் ஏற்றுக்கொண்டால், அது ஐரோப்பாவில் ஒரு புதிய போரைத் தொடங்கி வைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அபாயகரமான உளவு விமானங்கள்!
ரஷ்யா தனது போர் விமானங்களை போலந்து மற்றும் எஸ்டோனியா நாடுகளின் வான் எல்லைகளில் பறக்கவிட்டு, நேட்டோவின் பாதுகாப்புத் திறனை சோதிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, நேட்டோ படைகள் எல்லைப் பகுதிகளில் தங்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன.
போலந்து பிரதமரின் இந்த அறிக்கை, ஒருவேளை ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியை மீறினால், நேட்டோ நாடுகளுக்கு இடையே போர் மூளுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த முடிவானது, உக்ரைனில் நடக்கும் போர், ஐரோப்பா முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.