மடகாஸ்கரில் அரசியல் குழப்பம் : ராணுவப் பாதுகாப்புடன் முக்கிய சதுக்கத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைவு! 

மடகாஸ்கரில் அரசியல் குழப்பம் : ராணுவப் பாதுகாப்புடன் முக்கிய சதுக்கத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைவு! 

மடகாஸ்கரில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தலைநகர் அன்டானானரிவோவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது! இதுவரை போராட்டக்காரர்களைக் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசி விரட்டிய ராணுவம், இப்போது அவர்களை பீரங்கிப் பாதுகாப்புடன் நகரின் மையப் பகுதியான ‘மே 13 சதுக்கத்திற்குள்’ (May 13 Square) அழைத்துச் சென்றுள்ளது!

ராணுவம் யாருக்கு ஆதரவு? நாட்டின் அரசியல் மற்றும் அதிகாரத்தின் அடையாளமாக விளங்கும் இந்தச் சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் ராணுவத்தின் துணையோடு நுழைந்தது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் அதிர்ச்சியையும், பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது! அதிபருக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ராணுவம் ஆதரவாகச் செயல்படத் தொடங்கிவிட்டதா? அல்லது இது ராணுவப் புரட்சிக்கான அறிகுறியா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தலைவர் கிம் ஜாங் உன்னைப் போல் ஒரு ராணுவத் தளபதி… போராட்டக்காரர்களைச் சந்திக்க ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் நேரடியாகச் சென்றதோடு, போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

அடுத்து என்ன நடக்கும்? மடகாஸ்கரில் அதிபரின் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தத் தருணத்தில், ராணுவத்தின் இந்தத் திடீர் நடவடிக்கை, அரசியல் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றப் போகிறதா அல்லது மக்களின் கோரிக்கைகளுக்குப் பணிந்து அதிபர் ராஜினாமா செய்வாரா என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading