அப்பா எத்தனை நாள் உயிரோடு இருப்பார் என்று தெரியாது: காசுக்காக காட்டிக் கொடுக்கும் ஹரி !

எனது அப்பா( மன்னர் சார்ளஸ்) என்னோடு பேசுவது இல்லை ! மாளிகையில் உள்ள அதிகாரிகள், எனக்கும் அப்பாவுக்குமான இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளார்கள். இது போக அப்பா இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருப்பார் என்று எனக்கு தெரியவில்லை ! என்று அணு குண்டு ஒன்றை தூக்கிப் போட்டுள்ளார் இளவரசர் ஹரி.

நேற்றைய தினம்(02) BBCக்கு அவர் கொடுத்த ஒரு நேர்காணலில் மேற்கண்டவாறு இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். தான் பிரித்தானியா வரும் வேளை தனது குடும்பத்திற்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று, லண்டன் நீதிமன்றில் அவர் தொடுத்த வழக்கு தோல்வியை தழுவியது. இதனால் கடுப்பாகியுள்ள ஹரி, BBC நேர்காணலில் பல விடையங்களை தெரிவித்துள்ளார். இந்த நேர்காணலுக்காக அவர் பணத்தையும் பெற்றுள்ளார்.

மன்னர் சார்ளசுக்கு கான்சர் இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அவர் அதற்கான சிகிச்சையை பெற்று வருகிறார். ஆனால் அப்பா சாவோடு போராட்டிக் கொண்டு இருக்கிறார் என்று ஹரி தெரிவித்துள்ள விடையம், பிரித்தானிய மக்களை மட்டும் அல்ல, உலகில் உள்ள பலரை கவலை கொள்ள வைத்துள்ளது.

இதேவேளை தன்னையும் தனது மனைவியையும், மாளிகை அதிகாரிகள் சமமாக மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் ஹரி சுமத்த தவறவில்லை. இனி ஒரு போதும், தனது மனைவியை மற்றும் பிள்ளைகளை தான் பிரித்தானியாவுக்கு கொண்டுவர மாட்டேன் என்று ஹரி தெரிவித்துள்ளார்.