தனது மனைவியை பக்கிங்ஹாம் அரன்மனை அதிகாரிகள், இன வெறியோடு நடத்துகிறார்கள். அரச குடும்பத்தில் தனது மனைவியை வேறுபாடாக பார்கிறார்கள் என்று பல குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு மாளிகையில் இருந்து வெளியேறிய இளவரசர் ஹரி, பின்னர் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
இன் நிலையில் அவர் சில வருடங்களுக்கு முன்னர் தனது அன்னை டயானா நினைவாக ஒரு அறக்கட்டளையை நிறுவினார். இதற்கு Dr Sophie Chandauka என்ற பெண்ணை தலைவராக நியமித்தார். குறித்த இந்த ஆபிரிக்க பெண் தலைவராக இருக்கும் வேளை, அவர் கொண்டு வந்த பல திட்டங்களை நிராகரித்துள்ளார் ஹரி. இதனால் இவர்கள் இடையே சில முறுகல் தோன்றியுள்ளது. அது தொடர்பாக ஹரி , அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் போது மிகவும் கீழ் தரமான வார்த்தையால் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குறுஞ்செய்திகள் சிலவற்றை மீடியாவுக்கு வெளியிட்ட அந்தப் பெண், ஹரி தொடர்பாக TVக்களில் பேசி வருகிறார். இதனால் வேறு வழி இன்றி ஹரி அறக்கட்டளையின் நிவாகப் பொறுப்பில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் விலகினார்.
இருப்பினும் குறிப்பாக ஹரி திட்டி எழுதிய குறுஞ்செய்தியை அந்தப் பெண் இதுவரை வெளியிடவில்லை. அது வெளியானால் ஹரின் முகத் திரை முற்றாக கிழிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.