அகதீர் நகருக்கு வெளியே உள்ள லெக்லியா (Leqliaa) என்ற சிறிய நகரத்தில் பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
பொதுச் செலவுகளில் ஊழல் மற்றும் நிர்வாக முடிவுகளை எதிர்த்து இளைஞர்கள் தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் போராட்டங்கள் நடத்தப்படும் என போராட்டக் குழு அறிவித்துள்ளது, ஆனால் வன்முறையைக் கைவிட்டு அமைதியான முறையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பொது சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் உட்பட பல கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், 2030 உலகக் கோப்பைக்காக பில்லியன்கணக்கில் முதலீடு செய்யப்படும் நிலையில், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு நிதி இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த வன்முறையில் 354 பேர் காயமடைந்துள்ளனர் (அவர்களில் பெரும்பாலானோர் சட்ட அமலாக்கப் பிரிவினர்) என்றும், சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
நிலைமையைக் கட்டுப்படுத்த பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக மொராக்கோ பிரதமர் தெரிவித்துள்ளார்.