அமெரிக்க அதிபர் டொனால் ரம், ரஷ்ய அதிபர் புட்டினுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் 30 நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு சார்பு ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகிறது. இதில் எந்த ஒரு உண்மையும் இல்லை. அதாவது உக்ரைனில் உள்ள எரிசக்த்தி நிலையங்களை நாம் 30 நாட்களுக்கு தாக்கப் போவது இல்லை என்ற வாக்குறுதியை மட்டுமே ரஷ்ய அதிபர் புட்டின் வழங்கியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் புடின் ஆகியோர் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடியபோது, உக்ரைனில் எரிசக்த்தி நிலையங்களை மற்றும் அடிக்கடி தாக்கப்படும் தளவாடக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட தாக்குதிகளை 30 நாட்களுக்கு நிறுத்துவதற்கு இருவரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஒவைத்தவீடு (White House) தகவல் வெளியிட்டுள்ளது.
இதை ஒரு “அமைதிக்கான முதல் படி” என அமெரிக்க அதிகாரிகள் விவரித்துள்ளனர். இது கருங்கடலில் கடற்படை போர்நிறுத்தம் மற்றும் முழுமையான, நிலையான அமைதியை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த முயற்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ரஷ்ய தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், போர்நிறுத்தம் விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும் என்றால், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் இராணுவ மற்றும் உளவுத்துறை உதவிகளை நிறுத்த வேண்டும் என்று புடின் ட்ரம்பிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி உரையாடல் GMT நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கி, ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவின் மூன்று வருட உக்ரைன் படையெடுப்பை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா 30 நாள் போர்நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை ரஷ்யா ஏற்க வேண்டும் என வலியுறுத்தும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.