கேஷ் மாநிலத்தில் பிடிபட்ட உக்ரைன் வீரர்கள் ‘தீவிரவாதிகள்’ ஆக நடத்தப்படுவார்கள் என்று புட்டின் அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்ன, எரி வாயு செல்லும் பைப் வழியாக ரஷ்ய கமாண்டோக்கள், கேஷ் நகரினுள் புகுந்து, அங்கே நிலை கொண்டு இருந்த உக்ரைன் ராணுவத்தை சுற்றிவளைத்துள்ளார்கள். இதில் 430 உக்ரைன் ராணுவத்தினர், ரஷ்ய படைகளிடம் சிக்கியுள்ள நிலையில்.
அவர்களை பயங்கரவாதிகள் என்றே தனது அரசு கருதும் என்று புட்டின் கூறியுள்ளார். இதனால் பெரும் சர்சை கிளம்பியுள்ளது. அமெரிக்கா அதிகாரிகள் புட்டினை சந்திக்க ரஷ்யா செல்லவுள்ள நிலையில், இப்படி ரஷ்யா அறிவித்துள்ள விடையம் அமெரிக்காவை அதிருத்தியடைய வைத்துள்ளது.
இதனால் சமாதானப் பேச்சுக்கு முன்னர், இந்த 430 ராணுவ வீரர்களின் விடுதலை தொடர்பாக பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய சூழ் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது.