இலங்கையில் பல குற்றச்செயல்களுக்காக தேடப்பட்டு வந்த, அமில சம்பத் ரஷ்யாவுக்கு தப்பியோடி இருந்தார். அவர் இந்தியா சென்று அங்கிருந்து ரஷ்யா சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. இலங்கையில் இருக்கும் வரை அவரை எந்த ஒரு பொலிசாராலும் நெருங்க முடியவில்லை.
அமில சம்பத்துக்கு அந்த அளவு அரசியல் செல்வாக்கும் இருந்து வந்தது. ஆனால் அனுர அரசாங்கம் வந்த கையோடு அவர் தலைமறைவாகி இருந்தார். ஆனால் தற்போது இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று ரஷ்ய பொலிசார் அவரை கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் பாதாள உலகக் குற்றவாளி அமில சம்பத் என்கிற ‘ரோட்டும்ப அமிலா’ ரஷ்யாவில் ரஷ்ய சட்ட அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், இது தொடர்பான தகவல்கள் இலங்கை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.