18வயது பையன் விட்ட ஒரே குத்து: ராணுவ கோப்பிரல் தரையில் விழுந்து மரணம் !

இந்த குழந்தை முகத்தில் இருக்கும், 18 வயதே ஆன மேசன் என்ற பையன், ஒரு பிரித்தானிய ராணுவக் கோப்ரலை முகத்தில் குத்தி கொலை செய்துள்ளார். ஓட்ட-பேன் என்னும் நகரில், ராணுவ வீரர்கள் சென்று பயிற்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலையில். இரவில் அவர்களில் சிலர் வெளியே சென்று ஜாலியாக இருந்து விட்டு ஹாஸ்டல் திரும்பியுள்ளார்கள். இதில் 35 வயதாகும் றொபேட்ஸ்சும் இருந்தார்.

அவர் ஹாஸ்டல் திரும்பும் சமயம், அவர்களோடு வந்த உள்ளூர் பையன் ஒருவன், திடீரென அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென கோப்ரல் றொபேட்ஸ் முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். சிங்கிள் பஞ்ச். அதாவது ஒரே ஒரு குத்து தான், ராணுவக் கோப்ரல் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

இதனை அடுத்து தான் வென்று விட்டதாக அந்த 18 வயது பையன் ஆர்பரித்துள்ளான். ஆனால் றொபேட் மூளைக்கு உள்ளே ரத்தம் கசிய ஆரம்பித்த நிலையில், சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். அவர் 4 பிள்ளைகளின் அப்பா என்பது மிகவும் சோகமான விடையம். இது இவ்வாறு இருக்க.

எப்படி இந்தப் 18 வயதுப் பையனால் இதனைச் செய்ய முடிந்து என்று பார்த்தால். குறித்த பையன் 10 வயதில் இருந்து குத்துச் சண்டை பயிற்ச்சி பெற்று வந்தார் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.