Russia Rejects Trump s Ceasefire Offer: ரம் மூக்கில் குத்திய ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்கவில்லை

உண்மையில் அமெரிக்க அதிபர் டொனால் ரம், ஏதோ ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து வருகிறார் போலவே தோன்றுகிறது. அமெரிக்க அதிபர் பதவியில் இருந்தால், அவர் என்ன சொன்னாலும் உலகில் உள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களும், அதனை ஏற்றுகொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறார். உக்ரைன் ரஷ்யா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை கொண்டு வர, ரம் அனுப்பிய தூதுவர் இன்று(சற்று முன்னர்) வெறும் கையோடு திரும்பியுள்ளார். ரஷ்ய அதிகாரிகள் சமாதான தீர்வை ஏற்கவில்லை !

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த உக்ரைன்-ரஷ்யா போருக்கு இடையூறாக அமைதிக்கான ஒப்பந்தத்தை ரஷ்யா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை பேச்சாளர் மரியா சகரோவா, “டிரம்பின் அமைதி முன்மொழிவு ரஷ்யாவின் நிலைப்பாட்டோடு ஒத்துப்போகவில்லை” என அறிவித்தார். அவர் மேலும், “போரின் முடிவுக்கான எந்தத் தீர்வும், ரஷ்யாவின் பாதுகாப்பு குறிக்கோள்களைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்” என்றார்.

இதற்கு முன்னதாக, டொனால்ட் டிரம்ப், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ஒரு மாதத்திற்குள் ஒரு சமாதான ஒப்பந்தத்தை உருவாக்குவேன் என தெரிவித்திருந்தார். அதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மாஸ்கோவில் இருந்து வந்த தகவலின்படி, ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினாலும், அதற்கான நிபந்தனைகளை உக்ரைனும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் ஏற்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, உக்ரைனும் அமெரிக்காவும் இணைந்து புதிய ராணுவ உதவித் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன, இது ரஷ்யாவின் எதிர்ப்பை அதிகரிக்கக்கூடும்.