அழிந்த ரஷ்ய விமானங்களை படம் எடுத்த உக்ரைன் உளவு சாட்டலைட் !

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான், உக்ரைன் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை ரஷ்யா மீது நடத்தி இருந்தது. ஆப்பரேஷன் ஸ்பைடன் வெப் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ரஷ்யாவின் பல விமானங்கள் வெடித்து சிதறியுள்ள நிலையில். தமது தாக்குதலில் 70 ரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. ஆனால் 40 விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக் வேறு சில செய்திச் சேவை அறிவித்து இருந்தது.

இருப்பினும் தாக்குதல் நடந்த பின்னர், துல்லியமாக அந்த இடங்களை ஸ்பை சாட்டலைட் மூலம் உக்ரைன் படம் பிடித்து வெளியிட்டுள்ளது. இதில் ரஷ்யாவின் அதி நவீன எஸ்.யூ விமானங்களும் அடங்கும். இதனூடாக ரஷ்யா தனது வான் படையில் 33% விகிதத்தை இழந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதேவேளை உக்ரைன் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.

இது இவ்வாறு இருக்க, பிரித்தானியாவில் உள்ள ரஷ்ய தூதுவர் இந்த தாக்குதலை வழி நடத்தியது பிரித்தானியா தான் என்றும். பிரித்தானிய சாட்டலைட்டை பயன்படுத்தியே உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.