ஈழத் தமிழர்களின் பணத்தை கரியாக்கும் சீமான்: உச்ச நீதிமன்றில் 20 லட்சம் செலவில் மணு !

கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள சீமான், சென்னை உயர் நீதிமன்றத்திடம் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார். ஆனால் இது கற்பழிப்பு வழக்கு இதனை தள்ளுபடி செய்ய முடியாது. விசாரணை தொடரும் என்று உயர் நீதிமன்றம் அறிவிக்க. டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றில், சென்னை நீதிமன்ற ஆணை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, வழக்கு தொடுத்துள்ளார் சீமான்.

இதற்காக அவர் 20 லட்சம் ரூபாய் செலவு செய்து, வடநாட்டு வக்கீல் ஒருவரை நியமித்துள்ளார். இந்த வழக்கு இன்று டெல்லி உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்துகிறது.

உலகில் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள், குளிர் மழையில் வேலை செய்து காசை சம்பாதித்து சீமானுக்கு கொடுக்க. பெண் சுகம் தேடி அலைந்த சீமான், வசமாக மாட்டிக் கொண்ட பின்னர், தற்போது ஈழத் தமிழர்கள் அனுப்பிய பணத்தில் இந்த வழக்கை நடத்துகிறார்.

இலங்கையில் புலிகள் அமைப்பு இருந்திருந்தால், இது போன்ற குற்றங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது ஊர் அறிந்த உண்மை. பச்சை மட்டை அடி இல்லையென்றால் , அது தான் ….