உலகையே உலுக்கிய கூட்டுப் பாலியல் வல்லுறவு குற்றவாளியின் தண்டனை நீட்டிப்பு!

உலகையே உலுக்கிய கூட்டுப் பாலியல் வல்லுறவு குற்றவாளியின் தண்டனை நீட்டிப்பு!

உலகையே உலுக்கிய ஜிசெல் பெலிகோட் (Gisèle Pelicot) கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அளித்திருந்த சிறைத் தண்டனை தற்போது அதிரடியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஹுசமெட்டின் டோகன் (Husamettin Dogan) என்ற 44 வயது நபர், தனக்கு எதிரான தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். நேற்று பிரான்சின் நிம்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Nimes Appeals Court), அவரது வாதத்தை நிராகரித்ததுடன், அவரது தண்டனையை ஓராண்டு அதிகரித்து, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக உத்தரவிட்டுள்ளது.

ஜிசெல் பெலிகோட் அவர்களை போதை மருந்து கொடுத்து மயக்க நிலையில் வைத்திருந்த அவரது முன்னாள் கணவர் டொமினிக் பெலிகோட் (Dominique Pelicot), இணையதளம் மூலம் அழைத்த 51 ஆண்களில் டோகனும் ஒருவர். இந்தச் சம்பவங்கள் 2011 முதல் 2020 வரை ஒரு தசாப்த காலமாக நடந்துள்ளன.

குற்றவாளிகள் 51 பேரில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஒரே நபர் டோகன் மட்டுமே! “தன்னை ஏமாற்றியது முன்னாள் கணவரே,” என்று வாதிட்டு, குற்றத்தில் இருந்து விடுவிக்க முயன்ற அவருக்கு, நீதிமன்றம் இந்த அதிரடியான நீட்டிப்பை வழங்கியுள்ளது!

இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட ஜிசெல் பெலிகோட் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பாலின வன்முறைக்கு எதிராகப் போராடும் ஆர்வலர்களுக்குப் பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. பெலிகோட், இந்தச் சோதனைகளைத் தாண்டி, பிரான்சில் பாலியல் வன்முறை கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக உயர்ந்துள்ளார்!

நீதி நிலைநாட்டப்பட்டது! இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜிசெல் பெலிகோட்டின் முன்னாள் கணவருக்கு ஏற்கனவே அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

Loading