உலுக்கும் சம்பவம்! மியன்மாரில் திருவிழாக் கூட்டத்தில் பாராகிளைடர் குண்டுத்தாக்குதல்! 24 பேர் உடல் சிதறி பலி!

உலுக்கும் சம்பவம்! மியன்மாரில் திருவிழாக் கூட்டத்தில் பாராகிளைடர் குண்டுத்தாக்குதல்! 24 பேர் உடல் சிதறி பலி!

 

நடுநடுங்க வைக்கும் சம்பவம்! மத்திய மியன்மார் நாட்டின் சாங் யூ நகரில் நடந்த புத்த மதத்தின் தாடிங்யுட் திருவிழா கொண்டாட்டம் கோர முடிவைச் சந்தித்துள்ளது! மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரத்தில், விண்ணிலிருந்து பறந்து வந்த பாராமோட்டார் மூலம் இயங்கும் பாராகிளைடர் ஒன்று, கண்மூடித்தனமாக இரண்டு குண்டுகளை திருவிழாக் கூட்டத்தின் மீது வீசியதில், குறைந்தது 24 அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறி துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை மாலை, தேசிய விடுமுறை தினத்தைக் கொண்டாடும் விதமாக, இராணுவ ஆட்சியை எதிர்த்து மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 100 பேரை குறிவைத்து இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, மியன்மார் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கிறது. ஐ.நா.வின் கூற்றுப்படி, இதுவரை 5,000க்கும் அதிகமானோர் இந்த மோதலில் பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதல், நாட்டை உலுக்கியுள்ளதோடு, மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

விமானத் தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததாகவும், போராட்டத்தை விரைவாக முடிக்க முயன்றதாகவும் மக்கள் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால், பாராமோட்டர்கள் எதிர்பார்த்ததைவிட வேகமாக வந்து, இந்த பயங்கரச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளன. ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் துயரமும் சூழ்ந்த இந்த நிகழ்வு, உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது!

 

Loading