அதிர்ச்சி தகவல்! 25,000 அமெரிக்கர்களை பலி கேட்க காத்திருந்த ‘மரண நீர்மூழ்கி’ தகர்ப்பு!

அதிர்ச்சி தகவல்! 25,000 அமெரிக்கர்களை பலி கேட்க காத்திருந்த ‘மரண நீர்மூழ்கி’ தகர்ப்பு!

அமெரிக்காவை நோக்கி அதிநவீன போதைப்பொருட்களைக் கடத்தி வந்த, கொடூரமான உயர் ரக நீர்மூழ்கி கப்பலை அமெரிக்க ராணுவம் குண்டு வீசி தகர்த்ததாக ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

இது குறித்து டிரம்ப் தனது டுரூத் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கரீபியன் தீவுப் பகுதியில் இருந்து அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த அதிநவீன நீர்மூழ்கி கப்பலை குண்டு வீசி தகர்த்தது எனக்கு மிகப்பெரிய பெருமை.

உளவுத்துறை தகவலின்படி, இந்த கப்பலில் உயர் ரக ‘ஃபெண்டானைல்’ போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு ஈகுவடார் மற்றும் கொலம்பியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

‘திடுக்கிடும் உண்மை!’

இந்த கொடூர போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பல் மட்டும் அமெரிக்காவுக்குள் நுழைந்து இருந்தால், 25 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள்!” என தெரிவித்துள்ளார்.

நாட்டை பேரழிவில் இருந்து காத்தது அமெரிக்க ராணுவம்! டிரம்ப் பேச்சு உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Loading