கொழும்பு: இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் 3% சரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மார்ச் மாத இறுதியில் 6.53 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த வெளிநாட்டு கையிருப்பு, ஏப்ரல் மாத இறுதியில் 6.32 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. இது மாதாந்தம் 210 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சியாகும்.
நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையிலும், மேம்பட்ட பேரியல் பொருளாதார குறிகாட்டிகளுக்கு மத்தியிலும் இந்த வெளிநாட்டு கையிருப்பு சரிவு பதிவாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்திட்டம் இலங்கையில் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் போதே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெளிநாட்டு கையிருப்பு சரிவு, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால மீட்சிப் பாதை குறித்த அவதானிப்புகளை மீண்டும் ஒருமுறை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.