“பகல் நேரத்தில் வீடுகளை உடைத்து திருடிய குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது – மீகொட பொலிஸ் நிலையம்.
2025.03.04 அன்று மீகொட பொலிஸ் பிரிவின் கொடகம சந்தைக்கு அருகில் மீகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சோதனை செய்து 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினை வைத்திருந்த ஒரு சந்தேக நபரை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வயது 35, ருவன்வெல்ல பகுதியில் வசிப்பவர்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீகொட பொலிஸ் பிரிவில் ஒரு வீட்டை உடைத்து சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிய குற்றத்துடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் திருடிய டேப்லெட், கெமரா மற்றும் மணிக்கூடு ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.”