டொனால் ரம் இலங்கைக்கு எதிராக விதித்துள்ள புதிய வரியை அடுத்து, இலங்கையின் ரூபா பெரும் வீழ்ச்சிகண்டுள்ளது. இன்றைய தேதிக்கு(13 ஏப்ரல்) ஒரு பிரித்தானிய பவுண்டுக்கு 390 ரூபா என்ற விகிதத்தில் உள்ளது. இலங்கையில் இருந்து டன் கணக்கில் ரப்பர் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.
அதற்கு தற்போது 46 சத விகித வரியை ரம் விதித்துள்ளார். அதேபோல ரத்தினக் கற்கள், தெயிலை என்று அனைத்து அமெரிக்க ஏற்றுமதிகளும் பாதிப்படைந்து உள்ளது. வெந்த புண்ணில் வேல் பாச்சியது போல, இந்த சம்பவம் உள்ளது.
ஆனால் இலங்கை ஜனாதிபதி அனுரா, வெறும் கடிதம் ஒன்றை ரம்புக்கு எழுதி விட்டு மெளன்மாக இருக்கிறார். இதேவேளை வேறு உலக நாட்டு தலைவர்கள் அவசரமாக ரம்போடு பேசி , அமெரிக்க பொருட்களுக்கு தமது நாட்டில் இருக்கும் வரியை குறைப்பதாக கூறி, இணக்கப்பாட்டுக்கு வருகிறார். இதனை இன்னும் அனுரா செய்யவில்லை. இதேவேளை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கைக்கு பணத்தை அனுப்ப இது சரியான தருணம்.