பிரித்தானியாவில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த கவுன்சில் தேர்தலில், சம்பந்தமே இல்லாத ஒரு கட்சி பெரும் வெற்றியடைந்துள்ளது. இந்தக் கட்சி பிரித்தானியாவில் 3வது இடத்தில் கூட இருந்தது இல்லை என்பது பெரும் ஆச்சரியமான விடையம். ஆனால் மக்கள் இந்த இனவாத கட்சியை தெரிவு செய்துள்ள விடையம், பிரித்தானியாவைப் புரட்டிப் போட்டு உள்ளது.
நைஜில் பராஃக் என்றாலே அவர் ஒரு இனவாதி என்பது பலரும் அறிந்த விடையம். அவர் பிரித்தானியாவில் வெள்ளை இன மக்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர். ஆனால் அவரது ரி-போம் கட்சிக்கு மக்கள் எப்படி வாக்குகளைப் போட்டார்கள் என்பது , பெரும் குழப்பமாக உள்ளது. காலாதி காலமாக , பிரித்தானியாவில் லேபர் கட்சி அல்லது காண்சர் வேட்டிவ் கட்சியே பிரித்தானியாவை ஆட்சி புரிந்து வந்துள்ளது.
3வது கட்சியான லிபரல் கட்சி, மற்றும் 4வது இடத்தில் உள்ள ஸ்காடிஷ் கட்சி மற்றும் 5ம் அல்லது 6ம் இடத்தில் தான் இந்த ரி-போம் கட்சி இருந்தது. ஒரு MP வந்தால் கூட அது பெரிய விடையமாக இருந்த நிலையில். அந்தக் கட்சி தற்போது 635 ஆசனங்களை பெற்றுள்ளதோடு, பிரித்தானியாவில் உள்ள பல கவுன்சில்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதனால் லேபர் கட்சி , காண்சர்வேட்டிவ் கட்சி கதி கலங்கியுள்ளது.
லேபர் கட்சி , கடந்த 2024ல் தான் பிரித்தானியாவில் பெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. ஆனால் அதன் கொள்கைகள் மக்களை பெரிதும் கவரவில்லை என்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது. இதன் காரணத்தால் தான் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி , ரி-போம் கட்சிக்கு வாக்குகளை போட்டு உள்ளார்கள்.
வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என்ற கொள்கையோடு இயங்கும் இந்த இன வாதக் கட்சிக்கும் , அமெரிக்க எலான் மஸ்கிற்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. இதேவேளை இம்முறை ரி-போம் கட்சிக்கு எலான் மஸ்க் பல மறைமுக உதவிகளை செய்துள்ளார். அப்படி என்றால், இந்த எலான் மஸ்க் , பல உலக நாடுகளில் தனது மூக்கை நுளைத்து, தான் விரும்பும் நபர் அதிபராக வரவேண்டும் என்று செயல்பட்டு வருகிறார் என்பது தெளிவாகப் புரிகிறது.
அந்த வகையில் எலான் மஸ்க் , அமெரிக்க அதிர்பர் ரம் உதவியோடு பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார், என்பது தெளிவாகப் புரிகிறது.