லண்டனில் UBER டிலிவரி போல வேடமிட்டு 16வயது சிறுவனை சுட்டது யார் ?

நேற்று முன் தினம் லண்டன் ஸ்டொக் வெல்லில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 16வயதுச் சிறுவனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் பெயர் லத்தனல் என்று மேலும் அறியப்படுகிறது.

மிகவும் சவாலான விசாரணை என்று ஒப்புக்கொள்ளும் பொலிசார், நேற்று முன் தினம்(03) ஸ்டொக் வெல் என்னும் இடத்தில் 16வயது பள்ளி மாணவன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஊபர் டிலிவரி போல, கையில் உணவு கொண்டு வருவது போல அவ்விடத்திற்கு வந்த நபர் ஒருவர். துப்பாக்கியால் சுட்டு விட்டு, மிகவும் நிதானமாக அங்கிருந்து தப்பியுள்ளார்.

இவை அனைத்துமே மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இறந்து போன 16 வயதுடைய மாணவனை ஏன் கொலை செய்யவேண்டும் ? அதுவும் நெஞ்சுப் பகுதியில் சுட்டு அவரைக் கொலை செய்யவேண்டும் என்பது எல்லாமே மில்லியன் டாலர் கேள்விகளாக உள்ளது.

துப்பாக்கியால் சுட்ட நபர், எந்த ஒரு CCTVயும் இல்லாத ஒரு இடம் பார்த்து அங்கே தான் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார் என்பது மேலும் பயங்கரமான ஒரு விடையம் ஆகும்.

லண்டனில் கடந்த சில வருடங்களாக கத்திக் குத்து சம்பவங்கள், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் என்பன கடுமையாக அதிர்கரித்துள்ளது.