இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை, சிங்கள அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த உதாரணம் ஆகும். 2020ம் ஆண்டு போதைப் பொருள் வைத்திருந்த பெண் ஒருவரை, அதிபர் கோட்டபாய பயங்கரவாத தட்சைச் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளே அடைக்குமாறு உத்தரவை பிறப்பித்துள்ளார். அன்று நடந்த இந்த விடையத்தை எதிர்த்து, குறித்த பெண் தொடர்ந்த வழக்கின் முடிவுகள் நேற்று(18) வெளியாகியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் நேற்று(18) வழங்கிய தீர்ப்பின் படி, 2020 ஆம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் பயங்கரவாத தடுக்கச் சட்டத்தின் (PTA) கீழ் வழங்கிய தடுப்புக் காவல் உத்தரவு சட்டத்தை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளது.
இதன்படி, அந்த பெண்ணின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதால், அரசாங்கம் ரூ. 100,000 இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு பெலியகொடை சிறப்பு விசாரணைப் பிரிவால் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பிறகு, இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது.