Teenager accused to assassinate Donald Trump: அப்பா அம்மாவை கொன்று அவர்கள் பணத்தை எடுத்து டொனால் ரம்பை சுட இருந்த இளைஞர் !

தனது அம்மா அப்பாவை கொலை செய்து வீட்டில் போட்டு விட்டு. அவர்களது பணத்தை வங்கியில் இருந்து எடுத்து அதனை பாவித்து அமெரிக்க அதிபர் டொனால் ரம்பை சுட்டுக் கொலை செய்ய திட்டமிட்டு இருந்துள்ளார் Nikita Casap, என்ற இளைஞர். இது நடந்திருந்தால் கோடிக் கணக்கான மக்கள் பெரு மூச்சு விட்டிருப்பார்களோ தெரியவில்லை. இந்த திட்டத்தை முன்னரே அறிந்திருந்தால் , பல நாடுகளும் Nikita Casapவுக்கு உதவி செய்திருப்பார்கள் என்று தான் கூறவேண்டும்.

Nikita Casap என்னும் 17 வயது மாணவன், தனது அப்பா அம்மாவை கொலை செய்து, பிணத்தை வீட்டில் போட்டு விட்டு, எதுவுமே நடக்காதது போல 3 நாட்களாக பள்ளிக்கூடம் சென்று வந்துள்ளான். கொஞ்சம் கொஞ்சமாக வங்கியில் இருந்த பணத்தை எடுத்து £10,000 ஆயிரம் பவுண்டுகளை தன்வசமாக்கியுள்ளான். அதன் பின்னர் அப்பாவின் காரை எடுத்துக் கொண்டு, 800 மைல் தொலைவில் உள்ள கான்சாஸ் மாநிலம் சென்றுவிட்டான்.

இது இவ்வாறு இருக்கா, அப்பாவின் அம்மா(பாட்டி) தனது மகன் தன்னை 7 நாட்களாக தொடர்புகொள்ளவில்லை என பொலிசாருக்கு அறிவிக்க. விரைந்து சென்ற பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்றவேளை,  2 பிணங்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளது. மகனையும் காரையும் காணவில்லை. இதனால் மகன்(Nikita Casap) மேல் சந்தேகம் கொண்ட பொலிசார் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்கள்.

ஆனால் அவர் சிக்கவில்லை. இன் நிலையில் கான்சஸ் மாநிலத்தில் அவர் ஒரு வீதியில் செல்லும் வேளை, தடைசெய்யப்பட்ட ஒரு வீதியில் சென்றதால் அவரை பொலிசார் மறித்து விசாரித்தவேளை வசமாக மாட்டிக் கொண்டார். அவரது வீட்டில் காணப்பட்ட சில தகவல் அடங்கிய புத்தம் , பொலிசாருக்கு புதிராக இருக்கவே,  அவர்கள் FBI ஏஜண்டுகளை அழைக்க. அவர்கள் அதனை டீ-கோட் செய்து பார்த்தவேளை. அவர் அமெரிக்க ஜனாதிபதியை எப்படி கொலை செய்ய வேண்டும் என்ற குறிப்புகளை எழுதி வைத்திருந்துள்ளார். அது போக ..

ஒரு சிறிய குழுவோடு அவர் தொடர்பில் இருந்துள்ளார். அந்தக் குழுவில் இருக்கும் ஏனைய நபர்களும் அதிபர் ரம்பை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் தான். இதனால் பொலிசார் மற்றும் FBI ஏஜண்டுகள் பெரும் தேடுதல் நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளார்கள். இருப்பினும் அந்தக் குழு தலைமறைவாகி விட்டது.  இதனால் தற்போது டொனால் ரம்புக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.