பல ஆண்டுகளாக மர்மமாக மறைந்திருந்த ஆ௧2 ஆவெஙெர் ஈஈ, அமெரிக்காவின் சூப்பர் ரகசிய தாக்குதல் விமானம், தற்போது மீண்டும் ரகசிய ஆய்வகங்களில் உயிர் பெற்றிருக்கிறது என தகவல்கள் வெளியாகின்றன! 90-களில் நிதி சிக்கலால் இடைநிறுத்தப்பட்ட இந்த மர்ம விமானம், அதன் விலங்குப் போன்ற வடிவம் மற்றும் ரேடார் திரையில் மறைவு, விமானக் களத்தில் ஒரு புரட்சியாகவே கருதப்பட்டது.
அமெரிக்க இராணுவ ரகசிய ஆய்வகங்களில், இந்த ‘அவெஞ்சர்’ புதிய தலைமுறை தொழில்நுட்பங்களுடன் மீண்டும் உருவெடுத்து வருவதாக ஊடக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுதங்கள் ஏற்றும் திறன்! ஸ்டீல்த் தொழில்நுட்பத்தில் அபார மேம்பாடு! செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ட்ரோன் மூலமைப்பு என்று பல அம்சங்கள் இதில் உள்ளது.
இது உண்மையா? வதந்தியா? அதனை உறுதி செய்யும் தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன. “அமெரிக்கா மீண்டும் ஆகாயத்தில் ஆதிக்கம் செலுத்த தயாராகிறதா?” என்ற கேள்வி, ராணுவ வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது.
வாசகர்களே, இதன் பின்னணி, வரலாறு மற்றும் லீக் செய்யப்பட்ட டிசைன் ஸ்கெட்ச்கள் பற்றிய ஆழமான பகிர்வுகள் விரைவில் பார்ப்போம். அதுவரை அதிர்வு இணையத்தோடு இணைந்திருங்கள்.