சும்மா இருந்த ஓணானை எடுத்து வேட்டிக்கு உள்ளே விட்ட கதை என்று கூறுவார்களே… அது இதுவாகத் தான் இருக்க முடியும். Primorsky Krai, என்ற ரஷ்ய கடல் கரையில், சுனோக்கரிங் என்று சொல்லப்படும், கடலுக்கு அடியில் செல்லும் விளையாட்டை ஒருவர் செய்துள்ளார்.
கடலுக்கு அடியில் போனோமா, கீழே என்ன இருக்கு என்று பார்த்தோமா என்று இல்லாமல். சிவனே என்று சும்மா ஒதுங்கி இருந்த கணவாய்(ஆக்டோபஸ்) வீட்டை கம்பி ஒன்றால் நோண்டி உள்ளார் இந்த நபர். இவரிடம் ஆக்சிஸன் சிலிண்டர் கூட இல்லை. மூச்சை எடுத்து விட்டு. அதனை தம் பிடித்துக்கொண்டு கடலுக்கு அடியில் சென்றுள்ளார். அவர் கணவாயின் வீட்டை தாக்க, அது திடீரென வெளியே வந்து இவரது கழுத்தை பிடித்து இறுக்க ஆரம்பித்து விட்டது.
இந்த நபரால் அதன் பிடியில் இருந்து விடுபட முடியவில்லை. மேலும் கடலுக்கு அடியில் சம்பவம் நடந்ததால், இவரால் மூச்சை எடுக்கவும் முடியவில்லை. இதனால் திணறிப் போன இந்த இந்த ரஷ்ய நபர், உடனே மேலே வந்து கணவாய் பிடியில் இருந்து தப்ப அதனை இழுத்து, அகற்ற முனைந்துள்ளார்.
இதனால் அவர் மேலும் மேலும் பதற்றம் அடைந்து மூச்சை எடுக்க முடியாமல் அவதிப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ஏன் இந்த வம்பு ? சும்மா இருந்த கணவாயுடன் சொறியப் போய், அது தாக்குதல் நடத்தும் அளவுக்கு நிலமை மோசமாகியுள்ளது என்றால் பாருங்களேன் ? கீழே வீடியோ இணைப்பு:
View this post on Instagram