சூரிய மண்டலத்திற்கு அப்பால் உயிரின் இருப்பு — இது வரை கிடைத்த ‘மிக வலிமையான ஆதாரம்’ வெளியானது!

அமெரிக்கா-ஐரோப்பா உயிரியல் பரபரப்பு : பூமிக்கு 124 ஒளிவருஷ தொலைவில் உயிரின் ‘அதிக வலிமையான ஆதாரம்’!

விண்வெளி அறிவியல் உலகையே அதிரவைத்த புதிய அறிவிப்பு!
பூமிக்கு 124 ஒளிவருஷ தொலைவில் உள்ள K2-18 b கிரகம் — உயிரின் இருப்பை உறுதிப்படுத்தும் இதுவரை கண்ட மிக வலிமையான சான்றுகள்!

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மூலமாக, உயிரினத்தால் மட்டுமே பூமியில் உருவாகும் Dimethyl Sulfide (DMS) மற்றும் Dimethyl Disulfide (DMDS) என்ற இரசாயனங்கள் இக்கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

“இது இப்போது வரை வெளி உலக உயிரின் இருப்பை குறிக்கும் மிக வலிமையான சான்றாக இருக்கலாம்” என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிக்கூ மதுசூதன் பெருமிதத்துடன் கூறுகிறார்.

இக்கிரகம் 9 மடங்கு பூமிக்கும், 2.6 மடங்கு பரப்பளவும் கொண்டது. அதன் நட்சத்திரத்துடன் வாழக்கூடிய தூரத்தில் இருப்பது, இதற்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது.

பெரும் கடல்களால் சூழப்பட்ட வாழத்தக்க கிரகம் என்ற கருத்தை சில விஞ்ஞானிகள் வலியுறுத்த, மற்றவர்கள் வாயுக்களால் ஆனது அல்லது மெக்மா கடல்களுடன் கூடியது என வாதாடி வருகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பால், உலகில் மட்டும் உயிர் இருக்கிறதா என்ற நிலையான கேள்விக்குப் பதில் கிடைக்கும் நாள் புலப்படும் என மதுசூதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால், பிற விஞ்ஞானிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் சந்தேகத்துடனும் அணுகி வருகின்றனர்.
“இது இன்னும் ஒரு வாய்ப்பு, ஆனால் நிரூபணத்துக்கு மிகக் கடுமையான சான்றுகள் தேவை” என Open University-யின் டாக்டர் ஜோ பார்ஸ்டோ கூறுகிறார்.

இக்கண்டுபிடிப்பு, விண்வெளியில் உயிர் இருப்பதற்கான வழிகாட்டி சாத்தியமானவை என்றாலும்,
“இது ஒரு புரட்சிக்குரிய தொடக்கம்!” என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உற்சாகம் காட்டுகின்றனர்.

உலகின் மிக முக்கியமான அறிவியல் தருணமாக இது ஒருநாள் வரலாற்றில் நிலைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!