உக்ரைன் போரின் அனல், இப்போது ரஷ்யாவையே தீண்டத் தொடங்கிவிட்டது!

உக்ரைன் போரின் அனல், இப்போது ரஷ்யாவையே தீண்டத் தொடங்கிவிட்டது!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த பகீர் அறிவிப்பில், உக்ரைனின் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் புத்தம் புதிய ட்ரோன் (ஆளில்லா விமான) தாக்குதல்கள் காரணமாக ரஷ்யா முழுவதும் கடுமையான எரிவாயு (பெட்ரோல், டீசல்) பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

உக்ரைன் உருவாக்கியுள்ள புதிய ரக நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் தாக்குதல் ட்ரோன்கள் மூலம், ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் மீது தொடர்ந்து குண்டு மழை பொழிவதாகத் தெரிகிறது.

“எங்கள் ட்ரோன்களின் எண்ணிக்கை ரஷ்யாவின் எண்ணிக்கைக்கு இணையாகும்போது, ​​அவர்கள் எரிபொருள் பற்றாக்குறையை உணருவார்கள்! பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காத்திருக்கின்றன!” என்று ஜெலென்ஸ்கி சவால் விடுத்துள்ளார்.

உக்ரைனின் இந்தத் தொடர் தாக்குதல்கள், ரஷ்யாவின் போர் இயந்திரத்தை முடக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்கள் ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்கள் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பதற்றம் உலகை உலுக்கியுள்ளது! ரஷ்யாவுக்குள் எரிபொருள் நெருக்கடி ஆரம்பம்!

Loading