கதற வைக்கும் கொடிய விஷம்! சில நிமிடங்களில் மனித இதயத்தை நிறுத்தும் உலகின் மிக நச்சுத்தன்மை வாய்ந்த உயிரினம்!
உலகின் மிகக் கொடிய விஷத்தன்மை கொண்ட உயிரினம், அதன் விஷம் ஒரு மனிதனின் இதயத்தை சில நிமிடங்களில் நிறுத்திவிடும். இந்தக் கொடிய விலங்கின் ஒரு துளி விஷம் கூட ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கப் போதுமானது.
இந்த உயிரினத்தின் விஷம், நரம்பு மண்டலத்தைத் தாக்கி, ரத்த ஓட்டத்தை நிறுத்துகிறது. இதனால், இதயம் செயலிழந்து, உடனடி மரணம் ஏற்படுகிறது.
வெப்பமண்டலக் கடல்களில், நீரின் மேற்பரப்புக்குக் கீழே மறைந்திருக்கும் இந்த உயிரினம்தான் பாக்ஸ் ஜெல்லிமீன் (Box jellyfish). இதன் உடல், 30 செ.மீ. அகலம் கொண்ட, கண்ணாடி போன்ற, சதுர வடிவ மணியை ஒத்திருக்கும். இதன் கூரிய கொம்புகள் சுமார் 10 அடி (3 மீ) நீளம் வரை வளரும். இந்தக் கொம்புகளில், ஹார்பூன் போன்ற நுண் செல்கள் லட்சக்கணக்கில் உள்ளன. இவை விஷத்தை வெளியிடும் திறன் கொண்டவை.
பொதுவாக, ஜெல்லிமீன்கள் நீரின் போக்கிற்கு ஏற்ப நகரும். ஆனால், இந்த பாக்ஸ் ஜெல்லிமீன்கள் மிகவும் சுறுசுறுப்பானவை. அவை ஒரு தசைத் தொகுப்பைப் பயன்படுத்தி, மணிக்கு சுமார் 6.5 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும் திறன் கொண்டவை. எனவே, கடலில் செல்லும்போது, இந்த ஆபத்தான உயிரினங்களிடமிருந்து கவனமாக இருங்கள்!