‘கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி’ என நிரூபிக்க, அங்கே உடனடியாக இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆவேசமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
“இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது ஒரு துரோகச் செயல்! அந்த ஒப்பந்தம் செல்லாது. கச்சத்தீவு நம் பாரம்பரிய உரிமை. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, கச்சத்தீவை மீண்டும் பெறுவதுதான்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், “இலங்கைக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் கச்சத்தீவில், இந்திய தேசியக் கொடியை ஏற்றி, இந்திய ராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவர வேண்டும். இதுதான் மீனவர்களின் பாதுகாப்பையும், நமது இறையாண்மையையும் உறுதி செய்யும்” என்றும் அர்ஜுன் சம்பத் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.