அமெரிக்க ராணுவம் பாவிக்கும் Beretta M9 துப்பாக்கி: ஒரு பார்வை !

அமெரிக்க ராணுவத்தில் உள்ள 80% சத விகிதமான வீரர்கள், இந்த Beretta M9 என்ற 9MM கை துப்பாக்கியை தான் பாவிக்கிறார்கள். காடு மேடு, ஏன் நீருக்கு அடியில் கூட இதனைப் பாவித்து சுட முடியும். அந்த அளவு ஒரு நம்பிக்கையான துப்பாக்கி. எந்த நேரத்திலும் இது காலை வாருவது இல்லை என்கிறார்கள் வீரர்கள்.

குறிப்பாக அரபு நாடுகளில் உள்ள, ரகசிய ராணுவப் பிரிவினர், மற்றும் சி.ஐ.ஏ உறுப்பினர்களும் இந்த துப்பாக்கியை தான் பாவிக்கிறார்கள். காரணம் தூரி, மற்றும் சிறு மணல் துகள்கள் சென்றால் கூட, சில துப்பாக்கிகள் இயங்காமல் போய்விடும். ஆனால் பாலை வனத்திலும் இந்த துப்பாக்கியை பாவிக்க முடியும் என்ற நம்பிக்கை, அமெரிக்க வீரர்களுக்கு உள்ளது.

அமெரிக்க ராணுவம் ஆக்பானிஸ்தானில் நிலை கொண்டு இருந்தவேளை இந்த கை துப்பாக்கிகளை தான் பாவித்தார்கள். பல இடங்களில் எந்திர துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு கடும் வெய்யிலில் நடக்க முடியாது. அதனால் கை துப்பாக்கிகளை கொண்டே அமெரிக்க ராணுவம் , போரில் ஈடுபட்டது.

0.45 கலிபர் நேர்த்தி கொண்ட இந்த Beretta M9 துப்பாக்கி தனது வாழ் நாளில் 35,000 ஆயிரம் குண்டுகளை சுட வல்லது. அதன் பின்னர் இந்த துப்பாக்கியை பாவிப்பது, உகந்தது அல்ல என இதனை தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.