trade tariffs – including 44% on Sri Lanka: காத்து வாக்கில இலங்கைக்கும் ஆப்படித்த டொனால் ரம் !

இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும், பல பொருட்களுக்கு இனி 44% சத விகித வரி விதிக்கப்படும் என்று ரம் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ரம் பெரும் வர்த்தகப் போர் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதாவது உலகில் உள்ள பல நாடுகள், அமெரிக்காவில் இருந்து தமது நாட்டுக்கு வரும் பொருட்களுக்கு 30% தொடக்கம் 96% விகித வரியை விதித்து வருகிறது. கேட்டால் தமது நாட்டு உற்பத்தியை பெருக்கவே இவ்வாறு செய்கிறோம் என்கிறது அன் நாடுகள்.

ஆனால் தமது நாட்டுப் பொருட்களை அன் நாடுகள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கும் போது, அமெரிக்க அரசு வெறும் 5% வரியை விதிக்கிறது. அது போக சில பொருட்களுக்கு வரியே இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக இப்படி தான் இயங்கி வருகிறது. இதன் காரணத்தால் தான் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் வெளிநாட்டு பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது.

இன் நிலையில் எனது நாட்டுப் பொருட்களுக்கு அதிக வரியை விதித்து. அதனை சாதாரண மக்களுக்கு கிடைக்க விடாமல் தடுத்து வரும் நாடுகளுக்கு. நான் பாடம் ஒன்றை கற்பிக்கிறேன் என்று கூறிய ரம். தற்போது அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ள நாடுகளை தெரிவு செய்து , அன் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி போட ஆரம்பித்துள்ளார் ரம்.

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் முதல் 40 நாடுகளில் இலங்கையும் உள்ளது என்பது தான். இதனால் இலங்கை பொருட்கள் அமெரிக்கா செல்லும் வேளை, அமெரிக்கா 44% சத விகித வரியை இன்று(03 ஏப்பிரல்) தொடக்கம் அறவிடும். இதில் இருந்து தப்ப வேண்டும் என்றால். அமெரிக்க பொருட்களுக்கு இலங்கை விதிக்கும் வரியை , இலங்கை உடனே குறைக்கவேண்டும். இதனால் ஏற்படும் நன்மை என்ன ?

இலங்கையில் அமெரிக்க பொருட்களின் விலை குறையும். இதனால் அமெரிக்கா கூடுதல் பொருட்களை அனுப்பி வைக்கும். மேலும் இலங்கை பொருட்கள் அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகும். ஆனால் பல நாடுகள் அமெரிக்காவோடு வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போட தயாராகி வருகிறது. இருந்தாலும் அமெரிக்க அதிபர் ரம்பின் இந்த முடிவு என்பது அமெரிக்க மக்களின் நலம் சார்ந்து இருக்கிறது என்றே பலரும் கருதுகிறார்கள். உதாரணமாக ஆப்பிள் என்னும் அமெரிக்க கம்பெனி, தனது ஆப்பிள் போனை தயாரிக்க சீனாவில் 500பில்லியனை முதலீடு செய்துள்ளது. சீனாவில் இருந்து ஆப்பிள் போன் அமெரிக்கா வந்தால் வரி. இதனால் ஆப்பிள் நிறுவனம் இனி தனது மோபைல் போனை அமெரிக்காவில் தான் தயாரிக்க வேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளது. எனவே அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இதுவே ரம்பின் எண்ணம் !