லைட்டை ஆப் செய்து இன அழிப்பு வீடியோவை போட்டுக் காட்டி மிரட்டிய ரம் !

நேற்றைய தினம், வெள்ளை மாளிகைக்கு தனது அதிகாரிகளோடு விஜயம் செய்த தென்னாபிரிக்க அதிபரை, டொனால் ரம் கிழி கிழி என்று கிழித்துள்ளார். அனைவரும் பேசுவதற்காக அமர்ந்தவேளை. திடீரென வெளிச்சத்தை குறைத்து. அங்கே உள்ள பெரிய TV ஒன்றில், தென்னாபிரிக்காவில் வெள்ளை இன மக்கள் மீது அன் நாட்டு அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்பை படம் போட்டு காட்டி, ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ரம் கேட்க்க. பேய் அறைந்தது போல தென்னாபிரிக்க அதிபர் அங்கே உட்கார்ந்து இருந்தார்.

ஏனைய அதிகாரிகள் எதுவுமே பேசவில்லை. ஒரு நாட்டு அதிபரை அழைத்து தனது மாளிகையில் வைத்து மானம் கெடுத்தி அனுப்புவதில் ரம் மிகவும் திறமையானவர் என்பது தற்போது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இது போலவே உக்ரைன் அதிபர் ஜிலன்ஸ்கியையும் நீங்கள் ஏன் கோட் சூட் போடவே மாட்டேன் என்கிறீர்கள் என்று பகிரங்கமாக கேட்டு அவமானப்படுத்தினார்கள்.

மேலும் இத்தாலியப் பிரதமர் அதுவும் ஒரு பெண் என்று கூட பார்காமல், அவர் குட்டையாக இருப்பதாக ரம் நக்கல் அடித்தால். அதுவும் வெள்ளை மாளிகையில் வைத்து தான். இதுபோலவே பிரான்ஸ் அதிபரையும் மரியாதை குறைவாக நடத்தினார் டொனால் ரம். இந்தக் கதை நீண்டு கொண்டே போகிறது.