உக்ரைன் மீது அமெரிக்கா போர்: 3 லட்சம் உக்ரைன் நாட்டவரை நாடு கடத்தும் ரம் !

அமெரிக்காவில் தஞ்சம் அடைந்து உள்ள சுமார் 3 லட்சம் உக்ரைன் நாட்டவரை ராணுவ விமானம் மூலம் நாடு கடத்த ரம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாடு மீது ரஷ்யா போர் தொடுத்து ஓய்ந்த நிலையில், தற்போது உக்ரைன் மீது அமெரிக்கா அறிவிக்கப்படாத போர் ஒன்றை ஆரம்பித்துள்ளது. முதலில் உக்ரைன் அதிபர் ஜிலன்ஸ்கி மிகவும் சக்த்திவாய்ந்த ஒரு தலைவராக மாறி இருப்பதால். அமெரிக்க அதிபர் டொனால் ரம் அவரை வெறுக்கத் தொடங்கினார். அதன் பின்னர் படிப்படியாக ஜிலன்ஸ்கியை அடி பணிய வைக்க டொனால் ரம் திட்டம் போட்டு உள்ளார்.

இதனால் வெள்ளை மாளிகையில் அதிபர் ரம் மற்றும் ஜிலன்ஸ்கிக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது அமெரிக்கா கொடுத்து வந்த ஆயுத உதவிகளை நிறுத்தியதோடு. புலனாய்வுத் தகவல்களை கொடுப்பதையும் நிறுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா உக்ரைனை தாக்க, அமெரிக்காவே வழி வகுத்து கொடுத்துள்ளது. உக்ரைனை ரஷ்யா கைப்பற்றினால், அது ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் ஆபத்து ஆகும். ஆனால் டொனால் ரம் , அது தனக்கு முக்கியம் இல்லை என்கிறார்.

இன் நிலையில் இன்றைய தினம் ஐரோப்பிய நாடுகளின் அனைத்து தலைவர்களும், பிரசில்ஸ்சில் கூடி, 800பில்லியன் யூரோக்களை திரட்டி. அதனூடாக பெரும் பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்றை நிறுவ திட்டம் தீட்டியுள்ள அதேவேளை. பிரான்ஸ் நாடு தனது அணு ஆயுதங்களை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஜேர்மனி இது நாள் வரை அமெரிக்க கவசத்தின் கீழ் இருந்து வந்து. ஆனால் ஜேர்மனி தனது சொந்த பாதுகாப்பிற்காக இனி தனியாக செயல்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தான் உக்ரைனை மேலும் நெருக்கடிக்குள் தள்ள, அமெரிக்காவில் தஞ்சம் அடைந்து உள்ள சுமார் 3 லட்சம் உக்ரைன் நாட்டவரை ராணுவ விமானம் மூலம் நாடு கடத்த ரம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களுக்கு ஜோ பைடன் அரசு விசா வழங்கியுள்ளது. அந்த விசாவை கேன்சல் செய்து அவர்களை உக்ரைனுக்கு திருப்பி அனுப்ப ரம் விசேட வர்த்தமானியில் கையெழுத்து போட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.