Trump declares war on Jeff Bezos: அமேசன் நிறுவனத்திற்கு எதிராக ரம் தொடுத்துள்ள போர் !

உலகிலேயே மிகவும் பெரிய நிறுவனமாக கருதப்படும் அமேசன், தனது பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் ரம் போட்டுள்ள வரிகளுக்கு அமைவாக, அமெரிக்காவில் விற்கப்படும் சீன மற்றும் வெளிநாட்டுப் பொருட்களின் விலையை அமெசன் நிறுவனம் அதிகரித்துள்ளது. இதனால் ஒரே நாளில் அமெரிக்காவில் உள்ள பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

அமெரிக்க அதிபர் கூறுவது போல, இந்த வரி விதிப்பு என்பது சாதாரணமான விடையம் அல்ல. அமெரிக்க மக்களுக்கு படு பொய்யான தகவலை அதிபர் ரம் தொடர்ந்தும் கொடுத்து வருகிறார். அதாவது அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று, சீனாவில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்தால், அதற்கான வரியை அன் நிறுவனம் அமெரிக்காவுக்கு செலுத்தவேண்டும். ஆனால் ரம் கூறுவது போல அந்த வரியை சீனா செலுத்த தேவை இல்லை.

கூடுதல் வரி கட்டி இறக்குமதியாகும் பொருட்களின் விலையும் கூடும். ஆனால் அமெரிக்க அதிபர் அமெரிக்க மக்களுக்கு ஒரு அறிவித்தலை விடுத்தார். அதாவது எந்த விதத்திலும் அமெரிக்காவில் பொருட்களின் விலை அதிகரிக்காது என்று. ஆனால் அப்படி இயங்கவே முடியாது. 10 டாலருக்கு ஒரு பொருளை வாங்கி எப்படி 8 டாலருக்கு விற்க்க முடியும் ? இதனால் அமேசன் நிறுவனம், தனது பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் பெரிதும் குழப்பமடைந்து விட்டார்கள்.

இதனை அடுத்து அமேசன் நிறுவுனர், ஜெஃப் மீது ரம் போர் ஒன்றை தொடுத்துள்ளார். அத்தோடு அமேசன் உரிமையாளரை வெள்ளை மாளிகை கடுமையா சாடியுள்ளது. இதேவேளை அமேசன் நிறுவனம் மீது அமெரிக்க அரசு சில வரிகளை போடவும், சில தடை உத்தரவுகளை கொண்டு வரவும் முனைகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு அமெரிக்க கம்பெனி மீதே, அமெரிக்கா போர் தொடுத்துள்ள விடையம் உலக நாடுகளையும், ஏனைய நிறுவனங்களையும் திகைக்க வைத்துள்ளது.